srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

1. கடவுள் வாழ்த்து

1  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பொருள்(விளக்கம்): அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
Transliteration: Akara Mudhala Ezhuththellaam AadhiPakavan Mudhatre Ulaku
Couplet: A, as its first of letters, every speech maintains;
The 'Primal Deity' is first through all the world's domains
Explanation: As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 1
2  கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
பொருள்(விளக்கம்): தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
Transliteration: Katradhanaal Aaya Payanenkol VaalarivanNatraal Thozhaaar Enin
Couplet: No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore
Explanation: What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 2
3  மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
பொருள்(விளக்கம்): மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
Transliteration: Malarmisai Ekinaan Maanati SerndhaarNilamisai Neetuvaazh Vaar
Couplet: His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain
In bliss long time shall dwell above this earthly plain
Explanation: They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 3
4  வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
பொருள்(விளக்கம்): விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
Transliteration: Ventudhal Ventaamai Ilaanati SerndhaarkkuYaantum Itumpai Ila
Couplet: His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain
Explanation: To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 4
5  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொருள்(விளக்கம்): இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
Transliteration: Irulser Iruvinaiyum Seraa IraivanPorulser Pukazhpurindhaar Maattu
Couplet: The men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well
Explanation: The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 5
6  பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
பொருள்(விளக்கம்): மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்
Transliteration: Porivaayil Aindhaviththaan Poidheer OzhukkaNerinindraar Neetuvaazh Vaar
Couplet: Long live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'
Explanation: Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 6
7  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
பொருள்(விளக்கம்): ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை
Transliteration: Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark KallaalManakkavalai Maatral Aridhu
Couplet: Unless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain
Explanation: Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 7
8  அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
பொருள்(விளக்கம்): அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
Transliteration: Aravaazhi Andhanan Thaalserndhaark KallaalPiravaazhi Neendhal Aridhu
Couplet: Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain
Explanation: None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 8
9  கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
பொருள்(விளக்கம்): உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்
Transliteration: Kolil Poriyin Kunamilave EnkunaththaanThaalai Vanangaath Thalai
Couplet: Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead
Explanation: The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 9
10  பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
பொருள்(விளக்கம்): வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
Transliteration: Piravip Perungatal Neendhuvar NeendhaarIraivan Atiseraa Thaar
Couplet: They swim the sea of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main
Explanation: None can swim the great sea of births but those who are united to the feet of God
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 1 - கடவுள் வாழ்த்து, குறள் : 10
Page 1 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com