
12. நடுவு நிலைமை
| 1 தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் |
| பொருள்(விளக்கம்): பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும் |
| Transliteration: Thakudhi Enavondru Nandre PakudhiyaalPaarpattu Ozhukap Perin |
| Couplet: If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain |
| Explanation: That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 111 |
| 2 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து |
| பொருள்(விளக்கம்): நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும் |
| Transliteration: Seppam Utaiyavan Aakkanj ChidhaivindriEchchaththir Kemaappu Utaiththu |
| Couplet: The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure |
| Explanation: The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 112 |
| 3 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல் |
| பொருள்(விளக்கம்): நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் |
| Transliteration: Nandre Tharinum Natuvikandhaam AakkaththaiAndre Yozhiya Vital |
| Couplet: Though only good it seem to give, yet gain By wrong acquired, not e'en one day retain |
| Explanation: Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 113 |
| 4 தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும் |
| பொருள்(விளக்கம்): ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும் |
| Transliteration: Thakkaar Thakavilar Enpadhu AvaravarEchchaththaar Kaanap Patum |
| Couplet: Who just or unjust lived shall soon appear: By each one's offspring shall the truth be clear |
| Explanation: The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 114 |
| 5 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி |
| பொருள்(விளக்கம்): ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும் |
| Transliteration: Ketum Perukkamum Illalla NenjaththukKotaamai Saandrork Kani |
| Couplet: The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages' ornament |
| Explanation: Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 115 |
| 6 கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் |
| பொருள்(விளக்கம்): நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும் |
| Transliteration: Ketuvalyaan Enpadhu Arikadhan NenjamNatuvoreei Alla Seyin |
| Couplet: If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discern |
| Explanation: Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, 'I shall perish.' |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 116 |
| 7 கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு |
| பொருள்(விளக்கம்): நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது |
| Transliteration: Ketuvaaka Vaiyaadhu Ulakam NatuvaakaNandrikkan Thangiyaan Thaazhvu |
| Couplet: The man who justly lives, tenacious of the right, In low estate is never low to wise man's sight |
| Explanation: The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 117 |
| 8 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி |
| பொருள்(விளக்கம்): ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும் |
| Transliteration: Samanseydhu Seerdhookkung Kolpol AmaindhorupaalKotaamai Saandrork Kani |
| Couplet: To stand, like balance-rod that level hangs and rightly weighs, With calm unbiassed equity of soul, is sages' praise |
| Explanation: To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 118 |
| 9 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் |
| பொருள்(விளக்கம்): நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை |
| Transliteration: Sorkottam Illadhu Seppam OrudhalaiyaaUtkottam Inmai Perin |
| Couplet: Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess |
| Explanation: Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 119 |
| 10 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் |
| பொருள்(விளக்கம்): பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும் |
| Transliteration: Vaanikam Seyvaarkku Vaanikam PenipPiravum Thamapol Seyin |
| Couplet: As thriving trader is the trader known, Who guards another's interests as his own |
| Explanation: The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 12 - நடுவு நிலைமை, குறள் : 120 |