srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

93. கள்ளுண்ணாமை

1  உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
பொருள்(விளக்கம்): மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்
Transliteration: Utkap Pataaar Oliyizhappar EgngnaandrumKatkaadhal Kontozhuku Vaar
Couplet: Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away
Explanation: Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame)
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 921
2  உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
பொருள்(விளக்கம்): மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்
Transliteration: Unnarka Kallai Unilunka SaandroraanEnnap Pataventaa Thaar
Couplet: Drink not inebriating draught Let him count well the cost
Who drinks, by drinking, all good men's esteem is lost
Explanation: Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 922
3  ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
பொருள்(விளக்கம்): கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்
Transliteration: Eendraal Mukaththeyum Innaadhaal EnmatruchChaandror Mukaththuk Kali
Couplet: The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise
Explanation: Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 923
4  நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
பொருள்(விளக்கம்): மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்
Transliteration: Naanennum Nallaal Purangotukkum KallennumPenaap Perungutrath Thaarkku
Couplet: Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard's grievous sin, that all condemn
Explanation: The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 924
5  கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
பொருள்(விளக்கம்): ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்
Transliteration: Kaiyari Yaamai Utaiththe PorulkotuththuMeyyari Yaamai Kolal
Couplet: With gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize
Explanation: To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions)
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 925
6  துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
பொருள்(விளக்கம்): மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்
Transliteration: Thunjinaar Seththaarin Verallar EgngnaandrumNanjunpaar Kallun Pavar
Couplet: Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem
Explanation: They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 926
7  உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
பொருள்(விளக்கம்): மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்
Transliteration: Ullotri Ulloor Nakappatuvar EgngnaandrumKallotrik Kansaai Pavar
Couplet: Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen's jest, when they the fault espy
Explanation: Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 927
8  களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்
பொருள்(விளக்கம்): மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்
Transliteration: Kaliththariyen Enpadhu Kaivituka NenjaththuOliththadhooum Aange Mikum
Couplet: No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad
Explanation: Let (the drunkard) give up saying 'I have never drunk'; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 928
9  களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
பொருள்(விளக்கம்): குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்
Transliteration: Kaliththaanaik Kaaranam Kaattudhal KeezhneerkKuliththaanaith Theeththureei Atru
Couplet: Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave
Is he who strives to sober drunken man with reasonings grave
Explanation: Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 929
10  கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
பொருள்(விளக்கம்): ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?
Transliteration: Kallunnaap Pozhdhir Kaliththaanaik KaanungaalUllaankol Untadhan Sorvu
Couplet: When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'
Explanation: When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink
பால் : பொருட்பால், அதிகாரம் : 93 - கள்ளுண்ணாமை, குறள் : 930
Page 93 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com