srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

38. ஊழ்

1  ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
பொருள்(விளக்கம்): ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்
Transliteration: Aakoozhaal Thondrum Asaivinmai KaipporulPokoozhaal Thondrum Mati
Couplet: Wealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs
Explanation: Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 371
2  பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை
பொருள்(விளக்கம்): அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்
Transliteration: Pedhaip Patukkum Izhavoozh ArivakatrumAakaloozh Utrak Katai
Couplet: The fate that loss ordains makes wise men's wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless
Explanation: An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 372
3  நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
பொருள்(விளக்கம்): கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்
Transliteration: Nunniya Noolpala Karpinum MatrundhanUnmai Yarive Mikum
Couplet: In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy
Explanation: Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 373
4  இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
பொருள்(விளக்கம்): உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்
Transliteration: Iruveru Ulakaththu Iyarkai ThiruveruThelliya Raadhalum Veru
Couplet: Two fold the fashion of the world: some live in fortune's light;
While other some have souls in wisdom's radiance bright
Explanation: There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 374
5  நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
பொருள்(விளக்கம்): நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்
Transliteration: Nallavai Ellaaan Theeyavaam TheeyavumNallavaam Selvam Seyarku
Couplet: All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness
Explanation: In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 375
6  பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
பொருள்(விளக்கம்): தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா
Transliteration: Pariyinum Aakaavaam Paalalla UyththuchChoriyinum Pokaa Thama
Couplet: Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain
Explanation: Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 376
7  வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
பொருள்(விளக்கம்): வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்
Transliteration: Vakuththaan Vakuththa Vakaiyallaal KotiThokuththaarkku Thuyththal Aridhu
Couplet: Save as the 'sharer' shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be
Explanation: Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 377
8  துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
பொருள்(விளக்கம்): நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்
Transliteration: Thurappaarman Thuppura Villaar UrarpaalaOottaa Kazhiyu Menin
Couplet: The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare
Explanation: The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 378
9  நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
பொருள்(விளக்கம்): நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
Transliteration: Nandraangaal Nallavaak Kaanpavar AndraangaalAllar Patuva Thevan?
Couplet: When good things come, men view them all as gain;
When evils come, why then should they complain
Explanation: How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 379
10  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
பொருள்(விளக்கம்): இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?
Transliteration: Oozhir Peruvali Yaavula MatrondruSoozhinun Thaanmun Thurum
Couplet: What powers so great as those of Destiny? Man's skill
Some other thing contrives; but fate's beforehand still
Explanation: What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 38 - ஊழ், குறள் : 380
Page 38 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com