srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

101. நன்ற்யில் செல்வம்

1  வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
பொருள்(விளக்கம்): அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?
Transliteration: Vaiththaanvaai Saandra Perumporul AqdhunnaanSeththaan Seyakkitandhadhu Il
Couplet: Who fills his house with ample store, enjoying none,
Is dead Nought with the useless heap is done
Explanation: He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him)
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1001
2  பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
பொருள்(விளக்கம்): யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்
Transliteration: Porulaanaam Ellaamendru Eeyaadhu IvarumMarulaanaam Maanaap Pirappu
Couplet: Who giving nought, opines from wealth all blessing springs,
Degraded birth that doting miser's folly brings
Explanation: He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1002
3  ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
பொருள்(விளக்கம்): புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்
Transliteration: Eettam Ivari Isaiventaa AatavarThotram Nilakkup Porai
Couplet: Who lust to heap up wealth, but glory hold not dear,
It burthens earth when on the stage of being they appear
Explanation: A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1003
4  எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
பொருள்(விளக்கம்): யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
Transliteration: Echchamendru Enennung Kollo OruvaraalNachchap Pataaa Thavan
Couplet: Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray
Explanation: What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1004
5  கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்
பொருள்(விளக்கம்): கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை
Transliteration: Kotuppadhooum Thuyppadhooum Illaarkku AtukkiyaKotiyun Taayinum Il
Couplet: Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store
Explanation: Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1005
6  ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்
பொருள்(விளக்கம்): தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்
Transliteration: Edham Perunjelvam Thaandhuvvaan ThakkaarkkondruEedhal Iyalpilaa Thaan
Couplet: Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart
Explanation: He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1006
7  அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று
பொருள்(விளக்கம்): வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது
Transliteration: Atraarkkondru Aatraadhaan Selvam MikanalamPetraal Thamiyalmooth Thatru
Couplet: Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows
Explanation: The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1007
8  நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
பொருள்(விளக்கம்): வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
Transliteration: Nachchap Pataadhavan Selvam NatuvoorulNachchu Marampazhuth Thatru
Couplet: When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree
Explanation: The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1008
9  அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
பொருள்(விளக்கம்): அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்
Transliteration: Anporeeith Tharsetru Aranokkaadhu EettiyaOnporul Kolvaar Pirar
Couplet: Who love abandon, self-afflict, and virtue's way forsake
To heap up glittering wealth, their hoards shall others take
Explanation: To heap up glittering wealth, their hoards shall others take
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1009
10  சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து
பொருள்(விளக்கம்): சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்
Transliteration: Seerutaich Chelvar Sirudhuni MaariVarangoorn Thanaiyadhu Utaiththu
Couplet: 'Tis as when rain cloud in the heaven grows day,
When generous wealthy man endures brief poverty
Explanation: The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)
பால் : பொருட்பால், அதிகாரம் : 101 - நன்ற்யில் செல்வம், குறள் : 1010
Page 101 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com