
113. காதற்சிறப்புரைத்தல்
| 1 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து |
| பொருள்(விளக்கம்): காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன் |
| Transliteration: Kannullaar Kaadha Lavaraakak KannumEzhudhem Karappaakku Arindhu |
| Couplet: My love doth ever in my eyes reside; I stain them not, fearing his form to hide |
| Explanation: As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1121 |
| 2 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து |
| பொருள்(விளக்கம்): சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள் |
| Transliteration: Nenjaththaar Kaadha Lavaraaka VeydhuntalAnjudhum Vepaak Karindhu |
| Couplet: Within my heart my lover dwells; from food I turn That smacks of heat, lest he should feel it burn |
| Explanation: As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1122 |
| 3 இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னுமிவ் வூர் |
| பொருள்(விளக்கம்): கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும் |
| Transliteration: Imaippin Karappaakku Arival AnaiththirkeEdhilar Ennum Iv Voor |
| Couplet: I fear his form to hide, nor close my eyes: 'Her love estranged is gone!' the village cries |
| Explanation: I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1123 |
| 4 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர் |
| பொருள்(விளக்கம்): காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு |
| Transliteration: Uvandhuraivar Ullaththul Endrum IkandhuraivarEdhilar Ennum Iv Voor |
| Couplet: Rejoicing in my very soul he ever lies; 'Her love estranged is gone far off!' the village cries |
| Explanation: My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1124 |
| 5 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர் |
| பொருள்(விளக்கம்): இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும் |
| Transliteration: Paalotu Thenkalan Thatre PanimozhiVaaleyiru Ooriya Neer |
| Couplet: The dew on her white teeth, whose voice is soft and low, Is as when milk and honey mingled flow |
| Explanation: The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1125 |
| 6 உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு |
| பொருள்(விளக்கம்): உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு |
| Transliteration: Utampotu Uyiritai Ennamar RannaMatandhaiyotu Emmitai Natpu |
| Couplet: Between this maid and me the friendship kind Is as the bonds that soul and body bind |
| Explanation: The love between me and this damsel is like the union of body and soul |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1126 |
| 7 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற் கில்லை யிடம் |
| பொருள்(விளக்கம்): நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு! |
| Transliteration: Karumaniyir Paavaainee Podhaayaam VeezhumThirunudharku Illai Itam |
| Couplet: For her with beauteous brow, the maid I love, there place is none; To give her image room, O pupil of mine eye, begone |
| Explanation: O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1127 |
| 8 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து |
| பொருள்(விளக்கம்): ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன் |
| Transliteration: Vaazhdhal Uyirkkannal Aayizhai SaadhalAdharkannal Neengum Itaththu |
| Couplet: Life is she to my very soul when she draws nigh; Dissevered from the maid with jewels rare, I die |
| Explanation: My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1128 |
| 9 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் |
| பொருள்(விளக்கம்): ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு |
| Transliteration: Ulluvan Manyaan Marappin MarappariyenOllamark Kannaal Kunam |
| Couplet: I might recall, if I could once forget; but from my heart Her charms fade not, whose eyes gleam like the warrior's dart |
| Explanation: If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her (Thus says he to her maid) |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1129 |
| 10 கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எம் காத லவர் |
| பொருள்(விளக்கம்): காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர் |
| Transliteration: Kannullin Pokaar Imaippin ParukuvaraaNunniyarem Kaadha Lavar |
| Couplet: My loved one's subtle form departs not from my eyes; I wink them not, lest I should pain him where he lies |
| Explanation: My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 113 - காதற்சிறப்புரைத்தல், குறள் : 1130 |