
74. நாடு
| 1 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு |
| பொருள்(விளக்கம்): செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும் |
| Transliteration: Thallaa Vilaiyulum Thakkaarum ThaazhvilaachChelvarum Servadhu Naatu |
| Couplet: Where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a 'land' |
| Explanation: A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 731 |
| 2 பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு |
| பொருள்(விளக்கம்): பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும் |
| Transliteration: Perumporulaal Pettakka Thaaki ArungettaalAatra Vilaivadhu Naatu |
| Couplet: That is a 'land' which men desire for wealth's abundant share, Yielding rich increase, where calamities are rare |
| Explanation: A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 732 |
| 3 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு |
| பொருள்(விளக்கம்): புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும் |
| Transliteration: Poraiyorungu Melvarungaal Thaangi IraivarkuIraiyorungu Nervadhu Naatu |
| Couplet: When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land' |
| Explanation: A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 733 |
| 4 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு |
| பொருள்(விளக்கம்): பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும் |
| Transliteration: Urupasiyum Ovaap Piniyum SerupakaiyumSeraa Thiyalvadhu Naatu |
| Couplet: That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe |
| Explanation: A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 734 |
| 5 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு |
| பொருள்(விளக்கம்): பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும் |
| Transliteration: Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum VendhalaikkumKolkurumpum Illadhu Naatu |
| Couplet: From factions free, and desolating civil strife, and band Of lurking murderers that king afflict, that is the 'land' |
| Explanation: A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 735 |
| 6 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை |
| பொருள்(விளக்கம்): எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும் |
| Transliteration: Ketariyaak Ketta Itaththum ValangundraaNaatenpa Naattin Thalai |
| Couplet: Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase |
| Explanation: The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 736 |
| 7 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு |
| பொருள்(விளக்கம்): ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும் |
| Transliteration: Irupunalum Vaaindha Malaiyum VarupunalumVallaranum Naattirku Uruppu |
| Couplet: Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defence |
| Explanation: The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 737 |
| 8 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து |
| பொருள்(விளக்கம்): மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும் |
| Transliteration: Piniyinmai Selvam Vilaivinpam EmamAniyenpa Naattiv Vaindhu |
| Couplet: A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealth |
| Explanation: Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 738 |
| 9 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு |
| பொருள்(விளக்கம்): இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும் |
| Transliteration: Naatenpa Naataa Valaththana NaatallaNaata Valandharu Naatu |
| Couplet: That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought |
| Explanation: The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 739 |
| 10 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு |
| பொருள்(விளக்கம்): நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும் |
| Transliteration: Aangamai Veydhiyak Kannum PayamindreVendhamai Villaadha Naatu |
| Couplet: Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace |
| Explanation: Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 74 - நாடு, குறள் : 740 |