srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

107. இரவச்சம்

1  கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
பொருள்(விளக்கம்): இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்
Transliteration: Karavaadhu Uvandheeyum Kannannaar KannumIravaamai Koti Urum
Couplet: Ten million-fold 'tis greater gain, asking no alms to live,
Even from those, like eyes in worth, who nought concealing gladly give
Explanation: Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1061
2  இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
பொருள்(விளக்கம்): பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்
Transliteration: Irandhum Uyirvaazhdhal Ventin ParandhuKetuka Ulakiyatri Yaan
Couplet: If he that shaped the world desires that men should begging go,
Through life's long course, let him a wanderer be and perish so
Explanation: If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1062
3  இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்
பொருள்(விளக்கம்): வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை
Transliteration: Inmai Itumpai Irandhudheer VaamennumVanmaiyin Vanpaatta Thil
Couplet: Nothing is harder than the hardness that will say,
'The plague of penury by asking alms we'll drive away.'
Explanation: There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working)
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1063
4  இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு
பொருள்(விளக்கம்): வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது
Transliteration: Itamellaam Kollaath Thakaiththe ItamillaakKaalum Iravollaach Chaalpu
Couplet: Who ne'er consent to beg in utmost need, their worth
Has excellence of greatness that transcends the earth
Explanation: Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1064
5  தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில்
பொருள்(விளக்கம்): கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை
Transliteration: Thenneer Atupurkai Aayinum ThaaldhandhadhuUnnalin Oonginiya Thil
Couplet: Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tasteless as the water clear
Explanation: Even thin gruel is ambrosia to him who has obtained it by labour
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1065
6  ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்
பொருள்(விளக்கம்): தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை
Transliteration: Aavirku Neerendru Irappinum NaavirkuIravin Ilivandha Thil
Couplet: E'en if a draught of water for a cow you ask,
Nought's so distasteful to the tongue as beggar's task
Explanation: There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1066
7  இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று
பொருள்(விளக்கம்): கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்
Transliteration: Irappan Irappaarai Ellaam IrappinKarappaar Iravanmin Endru
Couplet: One thing I beg of beggars all, 'If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray.'
Explanation: I beseech all beggars and say, 'If you need to beg, never beg of those who give unwillingly.'
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1067
8  இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
பொருள்(விளக்கம்): இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்
Transliteration: Iravennum Emaappil Thoni KaravennumPaardhaakkap Pakku Vitum
Couplet: The fragile bark of beggary
Wrecked on denial's rock will lie
Explanation: The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1068
9  இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
பொருள்(விளக்கம்): இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது
Transliteration: Iravulla Ullam Urukum KaravullaUlladhooum Indrik Ketum
Couplet: The heart will melt away at thought of beggary,
With thought of stern repulse 'twill perish utterly
Explanation: To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1069
10  கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
பொருள்(விளக்கம்): இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?
Transliteration: Karappavarkku Yaangolikkum Kollo IrappavarSollaatap Poom Uyir
Couplet: E'en as he asks, the shamefaced asker dies;
Where shall his spirit hide who help denies
Explanation: Saying 'No' to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 107 - இரவச்சம், குறள் : 1070
Page 107 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com