srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

120. தனிப்படர்மிகுதி

1  தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
பொருள்(விளக்கம்): தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்
Transliteration: Thaamveezhvaar Thamveezhap Petravar PetraareKaamaththuk Kaazhil Kani
Couplet: The bliss to be beloved by those they love who gains,
Of love the stoneless, luscious fruit obtains
Explanation: The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1191
2  வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
பொருள்(விளக்கம்): காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்
Transliteration: Vaazhvaarkku Vaanam Payandhatraal VeezhvaarkkuVeezhvaar Ala� Kkum Ali
Couplet: As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love
Explanation: The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1192
3  வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
பொருள்(விளக்கம்): காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்
Transliteration: Veezhunar Veezhap Patuvaarkku AmaiyumeVaazhunam Ennum Serukku
Couplet: Who love and are beloved to them alone
Belongs the boast, 'We've made life's very joys our own.'
Explanation: The pride that says 'we shall live' suits only those who are loved by their beloved (husbands)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1193
4  வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்
பொருள்(விளக்கம்): விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்
Transliteration: Veezhap Patuvaar Kezheeiyilar ThaamveezhvaarVeezhap Pataaar Enin
Couplet: Those well-beloved will luckless prove,
Unless beloved by those they love
Explanation: Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1194
5  நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை
பொருள்(விளக்கம்): நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?
Transliteration: Naamkaadhal Kontaar Namakkevan SeypavoThaamkaadhal Kollaak Katai
Couplet: From him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me
Explanation: He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1195
6  ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது
பொருள்(விளக்கம்): காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்
Transliteration: Orudhalaiyaan Innaadhu Kaamamkaap PolaIrudhalai Yaanum Inidhu
Couplet: Love on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good
Explanation: Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1196
7  பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்
பொருள்(விளக்கம்): காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!
Transliteration: Paruvaralum Paidhalum Kaanaankol KaamanOruvarkan Nindrozhuku Vaan
Couplet: While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown
Explanation: Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1197
8  வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்
பொருள்(விளக்கம்): பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது
Transliteration: Veezhvaarin Insol Peraaadhu UlakaththuVaazhvaarin Vankanaar Il
Couplet: Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they
Explanation: There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1198
9  நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு
பொருள்(விளக்கம்): என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்
Transliteration: Nasaiiyaar Nalkaar Eninum AvarmaattuIsaiyum Iniya Sevikku
Couplet: Though he my heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody
Explanation: 145 Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1199
10  உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு
பொருள்(விளக்கம்): நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்
Transliteration: Uraaarkku Urunoi Uraippaai KatalaichCheraaaai Vaazhiya Nenju
Couplet: Tell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea
Explanation: Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி, குறள் : 1200
Page 120 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com