
116. பிரிவாற்றாமை
| 1 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை |
| பொருள்(விளக்கம்): பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள் |
| Transliteration: Sellaamai Untel Enakkurai MatruninValvaravu Vaazhvaark Kurai |
| Couplet: If you will say, 'I leave thee not,' then tell me so; Of quick return tell those that can survive this woe |
| Explanation: If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1151 |
| 2 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு |
| பொருள்(விளக்கம்): முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது! |
| Transliteration: Inkan Utaiththavar Paarval PirivanjumPunkan Utaiththaal Punarvu |
| Couplet: It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace |
| Explanation: His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1152 |
| 3 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான் |
| பொருள்(விளக்கம்): பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது |
| Transliteration: Aridharo Thetram Arivutaiyaar KannumPirivo Ritaththunmai Yaan |
| Couplet: To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows his promise and my breaking heart |
| Explanation: As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1153 |
| 4 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு |
| பொருள்(விளக்கம்): பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்? |
| Transliteration: Aliththanjal Endravar Neeppin TheliththasolTheriyaarkku Unto Thavaru |
| Couplet: If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring word |
| Explanation: If he who bestowed his love and said 'fear not' should depart, will it be the fault of those who believed in (his) assuring words ? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1154 |
| 5 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு |
| பொருள்(விளக்கம்): காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும் |
| Transliteration: Ompin Amaindhaar Pirivompal MatravarNeengin Aridhaal Punarvu |
| Couplet: If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again |
| Explanation: If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1155 |
| 6 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை |
| பொருள்(விளக்கம்): போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண் |
| Transliteration: Pirivuraikkum Vankannar Aayin AridhavarNalkuvar Ennum Nasai |
| Couplet: To cherish longing hope that he should ever gracious be, Is hard, when he could stand, and of departure speak to me |
| Explanation: Is hard, when he could stand, and of departure speak to me |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1156 |
| 7 துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை |
| பொருள்(விளக்கம்): என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே! |
| Transliteration: Thuraivan Thurandhamai Thootraakol MunkaiIraiiravaa Nindra Valai |
| Couplet: The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore |
| Explanation: Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1157 |
| 8 இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும் இன்னா தினியார்ப் பிரிவு |
| பொருள்(விளக்கம்): நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது |
| Transliteration: Innaadhu Inaniloor Vaazhdhal AdhaninumInnaadhu Iniyaarp Pirivu |
| Couplet: 'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell; 'Tis sadder still to bid a friend beloved farewell |
| Explanation: Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1158 |
| 9 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ |
| பொருள்(விளக்கம்): ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே! |
| Transliteration: Thotirsutin Alladhu Kaamanoi PolaVitirsutal Aatrumo Thee |
| Couplet: Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove |
| Explanation: Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1159 |
| 10 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர் |
| பொருள்(விளக்கம்): காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்? |
| Transliteration: Aridhaatri Allalnoi Neekkip PirivaatripPinirundhu Vaazhvaar Palar |
| Couplet: Sorrow's sadness meek sustaining, Driving sore distress away, Separation uncomplaining Many bear the livelong day |
| Explanation: As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 116 - பிரிவாற்றாமை, குறள் : 1160 |