
98. பெருமை
| 1 ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் |
| பொருள்(விளக்கம்): ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும் |
| Transliteration: Olioruvarku Ulla Verukkai IlioruvarkuAqdhirandhu Vaazhdhum Enal |
| Couplet: The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.' |
| Explanation: One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 971 |
| 2 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் |
| பொருள்(விளக்கம்): பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் |
| Transliteration: Pirappokkum Ellaa Uyirkkum SirappovvaaSeydhozhil Vetrumai Yaan |
| Couplet: All men that live are one in circumstances of birth; Diversities of works give each his special worth |
| Explanation: All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 972 |
| 3 மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் |
| பொருள்(விளக்கம்): பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள் |
| Transliteration: Melirundhum Melallaar Melallar KeezhirundhumKeezhallaar Keezhal Lavar |
| Couplet: The men of lofty line, whose souls are mean, are never great The men of lowly birth, when high of soul, are not of low estate |
| Explanation: Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 973 |
| 4 ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு |
| பொருள்(விளக்கம்): தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும் |
| Transliteration: Orumai Makalire Polap PerumaiyumThannaiththaan Kontozhukin Untu |
| Couplet: Like single-hearted women, greatness too, Exists while to itself is true |
| Explanation: Exists while to itself is true |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 974 |
| 5 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல் |
| பொருள்(விளக்கம்): அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள் |
| Transliteration: Perumai Yutaiyavar Aatruvaar AatrinArumai Utaiya Seyal |
| Couplet: The man endowed with greatness true, Rare deeds in perfect wise will do |
| Explanation: (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 975 |
| 6 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு |
| பொருள்(விளக்கம்): பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை |
| Transliteration: Siriyaar Unarchchiyul Illai PeriyaaraipPenikkol Vemennum Nokku |
| Couplet: 'As votaries of the truly great we will ourselves enroll,' Is thought that enters not the mind of men of little soul |
| Explanation: It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 976 |
| 7 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான் சீரல் லவர்கண் படின் |
| பொருள்(விளக்கம்): சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை |
| Transliteration: Irappe Purindha Thozhitraam SirappundhaanSeeral Lavarkan Patin |
| Couplet: Whene'er distinction lights on some unworthy head, Then deeds of haughty insolence are bred |
| Explanation: Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 977 |
| 8 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து |
| பொருள்(விளக்கம்): பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள் |
| Transliteration: Paniyumaam Endrum Perumai SirumaiAniyumaam Thannai Viyandhu |
| Couplet: Greatness humbly bends, but littleness always Spreads out its plumes, and loads itself with praise |
| Explanation: The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 978 |
| 9 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் |
| பொருள்(விளக்கம்): ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும் |
| Transliteration: Perumai Perumidham Inmai SirumaiPerumidham Oorndhu Vital |
| Couplet: Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme |
| Explanation: Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 979 |
| 10 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் |
| பொருள்(விளக்கம்): பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும் |
| Transliteration: Atram Maraikkum Perumai SirumaidhaanKutrame Koori Vitum |
| Couplet: Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim |
| Explanation: The great hide the faults of others; the base only divulge them |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 98 - பெருமை, குறள் : 980 |