srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

51. தெரிந்து தெளிதல்

1  அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
பொருள்(விளக்கம்): அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்
Transliteration: Aramporul Inpam Uyirachcham NaankinThirandherindhu Therap Patum
Couplet: How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make
Explanation: Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 501
2  குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு
பொருள்(விளக்கம்): குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்
Transliteration: Kutippirandhu Kutraththin Neengi VatuppariyumNaanutaiyaan Sutte Thelivu
Couplet: Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide
Explanation: (The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin)
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 502
3  அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
பொருள்(விளக்கம்): அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது
Transliteration: Ariyakatru Aasatraar Kannum TheriyungaalInmai Aridhe Veliru
Couplet: Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free
Explanation: When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 503
4  குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
பொருள்(விளக்கம்): ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்
Transliteration: Kunamnaatik Kutramum Naati AvatrulMikainaati Mikka Kolal
Couplet: Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man
Explanation: Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 504
5  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்
பொருள்(விளக்கம்): ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்
Transliteration: Perumaikkum Enaich Chirumaikkum ThaththamKarumame Kattalaik Kal
Couplet: Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true
Explanation: A man's deeds are the touchstone of his greatness and littleness
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 505
6  அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
பொருள்(விளக்கம்): நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்
Transliteration: Atraaraith Therudhal Ompuka MatravarPatrilar Naanaar Pazhi
Couplet: Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin
Explanation: Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 506
7  காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்
பொருள்(விளக்கம்): அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்
Transliteration: Kaadhanmai Kandhaa Arivariyaarth TherudhalPedhaimai Ellaan Tharum
Couplet: By fond affection led who trusts in men of unwise soul,
Yields all his being up to folly's blind control
Explanation: Yields all his being up to folly's blind control
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 507
8  தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
பொருள்(விளக்கம்): ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
Transliteration: Theraan Piranaith Thelindhaan VazhimuraiTheeraa Itumpai Tharum
Couplet: Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race
Explanation: Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 508
9  தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
பொருள்(விளக்கம்): நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது
Transliteration: Therarka Yaaraiyum Theraadhu TherndhapinTheruka Therum Porul
Couplet: Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide
Explanation: Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 509
10  தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
பொருள்(விளக்கம்): ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்
Transliteration: Theraan Thelivum Thelindhaankan AiyuravumTheeraa Itumpai Tharum
Couplet: Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal
Explanation: To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow
பால் : பொருட்பால், அதிகாரம் : 51 - தெரிந்து தெளிதல், குறள் : 510
Page 51 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com