srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

19. புறங்கூறாமை

1  அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
பொருள்(விளக்கம்): அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது
Transliteration: Arangooraan Alla Seyinum OruvanPurangooraan Endral Inidhu
Couplet: Though virtuous words his lips speak not, and all his deeds are ill
If neighbour he defame not, there's good within him still
Explanation: Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him 'he does not backbite.'
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 181
2  அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை
பொருள்(விளக்கம்): ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது
Transliteration: Aranazheei Allavai Seydhalin TheedhePuranazheeip Poiththu Nakai
Couplet: Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile
Explanation: To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 182
3  புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்
பொருள்(விளக்கம்): கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று
Transliteration: Purangoorip Poiththuyir Vaazhdhalin SaadhalArangootrum Aakkath Tharum
Couplet: 'Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh
Explanation: Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 183
4  கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
பொருள்(விளக்கம்): நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு
Transliteration: Kannindru Kannarach Chollinum SollarkaMunnindru Pinnokkaach Chol
Couplet: In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought
Explanation: Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 184
5  அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
பொருள்(விளக்கம்): ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்
Transliteration: Aranjollum Nenjaththaan Anmai PuranjollumPunmaiyaar Kaanap Patum
Couplet: The slanderous meanness that an absent friend defames,
'This man in words owns virtue, not in heart,' proclaims
Explanation: The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 185
6  பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்
பொருள்(விளக்கம்): பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்
Transliteration: Piranpazhi Kooruvaan Thanpazhi YullumThirandherindhu Koorap Patum
Couplet: Who on his neighbours' sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell
Explanation: The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 186
7  பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
பொருள்(விளக்கம்): இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்
Transliteration: Pakachchollik Kelirp Pirippar NakachcholliNatpaatal Thetraa Thavar
Couplet: With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away
Explanation: Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 187
8  துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
பொருள்(விளக்கம்): நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
Transliteration: Thunniyaar Kutramum Thootrum MarapinaarEnnaikol Edhilaar Maattu
Couplet: Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name
Explanation: What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 188
9  அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை
பொருள்(விளக்கம்): ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது
Transliteration: Arannokki Aatrungol Vaiyam PurannokkipPunsol Uraippaan Porai
Couplet: 'Tis charity, I ween, that makes the earth sustain their load
Who, neighbours' absence watching, tales or slander tell abroad
Explanation: The world through charity supports the weight of those who reproach others observing their absence
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 189
10  ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு
பொருள்(விளக்கம்): பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்
Transliteration: Edhilaar Kutrampol Thangutrang KaankirpinTheedhunto Mannum Uyirkku
Couplet: If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man
Explanation: If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 19 - புறங்கூறாமை, குறள் : 190
Page 19 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com