srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

67. வினைத்திட்பம்

1  வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
பொருள்(விளக்கம்): மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது
Transliteration: Vinaiththitpam Enpadhu Oruvan ManaththitpamMatraiya Ellaam Pira
Couplet: What men call 'power in action' know for 'power of mind'
Externe to man all other aids you find
Explanation: Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 661
2  ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
பொருள்(விளக்கம்): இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்
Transliteration: Oororaal Utrapin Olkaamai IvvirantinAarenpar Aaindhavar Kol
Couplet: 'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'
These two define your way, so those that search out truth declare
Explanation: Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 662
3  கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்
பொருள்(விளக்கம்): செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்
Transliteration: 663, Kataikkotkach Cheydhakka Thaanmai ItaikkotkinEtraa Vizhuman Tharum
Couplet: Man's fitting work is known but by success achieved;
In midst the plan revealed brings ruin ne'er to be retrieved
Explanation: So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 663
4  சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
பொருள்(விளக்கம்): சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்
Transliteration: Solludhal Yaarkkum Eliya AriyavaamSolliya Vannam Seyal
Couplet: Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say
Explanation: To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 664
5  வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்
பொருள்(விளக்கம்): செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்
Transliteration: Veereydhi Maantaar Vinaiththitpam VendhankanOoreydhi Ullap Patum
Couplet: The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state
Explanation: The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 665
6  எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
பொருள்(விளக்கம்): எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்
Transliteration: Enniya Enniyaangu Eydhu EnniyaarThinniyar Aakap Perin
Couplet: Whate'er men think, ev'n as they think, may men obtain,
If those who think can steadfastness of will retain
Explanation: If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 666
7  உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து
பொருள்(விளக்கம்): உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்
Transliteration: Uruvukantu Ellaamai Ventum UrulperundherkkuAchchaani Annaar Utaiththu
Couplet: Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car
Explanation: Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 667
8  கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்
பொருள்(விளக்கம்): மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்
Transliteration: Kalangaadhu Kanta Vinaikkan ThulangaadhuThookkang Katindhu Seyal
Couplet: What clearly eye discerns as right, with steadfast will,
And mind unslumbering, that should man fulfil
Explanation: An act that has been firmly resolved on must be as firmly carried out without delay
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 668
9  துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
பொருள்(விளக்கம்): இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்
Transliteration: Thunpam Uravarinum Seyka ThunivaatriInpam Payakkum Vinai
Couplet: Though toil and trouble face thee, firm resolve hold fast,
And do the deeds that pleasure yield at last
Explanation: Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 669
10  எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு
பொருள்(விளக்கம்): எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது
Transliteration: Enaiththitpam Ey Thiyak Kannum VinaiththitpamVentaarai Ventaadhu Ulaku
Couplet: The world desires not men of every power possessed,
Who power in act desire not,- crown of all the rest
Explanation: The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess
பால் : பொருட்பால், அதிகாரம் : 67 - வினைத்திட்பம், குறள் : 670
Page 67 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com