srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

90. பெரியாரைப்பிழையாமை

1  ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
பொருள்(விளக்கம்): ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்
Transliteration: Aatruvaar Aatral Ikazhaamai PotruvaarPotralul Ellaam Thalai
Couplet: The chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will
Explanation: Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil)
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 891
2  பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்
பொருள்(விளக்கம்): பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்
Transliteration: Periyaaraip Penaadhu Ozhukir PeriyaaraalPeraa Itumpai Tharum
Couplet: If men will lead their lives reckless of great men's will,
Such life, through great men's powers, will bring perpetual ill
Explanation: To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 892
3  கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
பொருள்(விளக்கம்): ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்
Transliteration: Ketalventin Kelaadhu Seyka AtalventinAatru Pavarkan Izhukku
Couplet: Who ruin covet let them shut their ears, and do despite
To those who, where they list to ruin have the might
Explanation: If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns)
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 893
4  கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்
பொருள்(விளக்கம்): எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்
Transliteration: Kootraththaik Kaiyaal Viliththatraal AatruvaarkkuAatraadhaar Innaa Seyal
Couplet: When powerless man 'gainst men of power will evil deeds essay,
Tis beck'ning with the hand for Death to seize them for its prey
Explanation: The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 894
5  யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
பொருள்(விளக்கம்): மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது
Transliteration: Yaantuch Chendru Yaantum Ularaakaar VendhuppinVendhu Serappat Tavar
Couplet: Who dare the fiery wrath of monarchs dread,
Where'er they flee, are numbered with the dead
Explanation: Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 895
6  எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
பொருள்(விளக்கம்): நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது
Transliteration: Eriyaal Sutappatinum Uyvuntaam UyyaarPeriyaarp Pizhaiththozhuku Vaar
Couplet: Though in the conflagration caught, he may escape from thence:
He 'scapes not who in life to great ones gives offence
Explanation: Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees)
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 896
7  வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
பொருள்(விளக்கம்): பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்
Transliteration: Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum EnnaamThakaimaanta Thakkaar Serin
Couplet: Though every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown
Explanation: If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 897
8  குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
பொருள்(விளக்கம்): மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்
Transliteration: Kundrannaar Kundra Madhippin KutiyotuNindrannaar Maaivar Nilaththu
Couplet: If they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed
Explanation: If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 898
9  ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்
பொருள்(விளக்கம்): உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்
Transliteration: Endhiya Kolkaiyaar Seerin ItaimurindhuVendhanum Vendhu Ketum
Couplet: When blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame
Explanation: Kings even fall from high estate and perish in the flame
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 899
10  இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்
பொருள்(விளக்கம்): என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது
Transliteration: Irandhamaindha Saarputaiyar Aayinum UyyaarSirandhamaindha Seeraar Serin
Couplet: Though all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they're lost
Explanation: Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless
பால் : பொருட்பால், அதிகாரம் : 90 - பெரியாரைப்பிழையாமை, குறள் : 900
Page 90 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com