
99. சான்றாண்மை
| 1 கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு |
| பொருள்(விளக்கம்): ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும் |
| Transliteration: Katanenpa Nallavai Ellaam KatanarindhuSaandraanmai Merkol Pavarkku |
| Couplet: All goodly things are duties to the men, they say Who set themselves to walk in virtue's perfect way |
| Explanation: It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 981 |
| 2 குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளதூஉ மன்று |
| பொருள்(விளக்கம்): நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல |
| Transliteration: Kunanalam Saandror Nalane PiranalamEnnalaththu Ulladhooum Andru |
| Couplet: The good of inward excellence they claim, The perfect men; all other good is only good in name |
| Explanation: The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 982 |
| 3 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ டைந்துசால் பூன்றிய தூண் |
| பொருள்(விளக்கம்): அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும் |
| Transliteration: Anpunaan Oppuravu Kannottam VaaimaiyotuAindhusaal Oondriya Thoon |
| Couplet: Love, modesty, beneficence, benignant grace, With truth, are pillars five of perfect virtue's resting-place |
| Explanation: Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 983 |
| 4 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு |
| பொருள்(விளக்கம்): உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு |
| Transliteration: Kollaa Nalaththadhu Nonmai PirardheemaiSollaa Nalaththadhu Saalpu |
| Couplet: The type of 'penitence' is virtuous good that nothing slays; To speak no ill of other men is perfect virtue's praise |
| Explanation: Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 984 |
| 5 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை |
| பொருள்(விளக்கம்): ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும் |
| Transliteration: Aatruvaar Aatral Panidhal AdhusaandrorMaatraarai Maatrum Patai |
| Couplet: Submission is the might of men of mighty acts; the sage With that same weapon stills his foeman's rage |
| Explanation: Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 985 |
| 6 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் |
| பொருள்(விளக்கம்): சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும் |
| Transliteration: Saalpirkuk Kattalai Yaadhenin TholviThulaiyallaar Kannum Kolal |
| Couplet: What is perfection's test? The equal mind To bear repulse from even meaner men resigned |
| Explanation: The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 986 |
| 7 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு |
| பொருள்(விளக்கம்): தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்? |
| Transliteration: Innaasey Thaarkkum Iniyave SeyyaakkaalEnna Payaththadho Saalpu |
| Couplet: What fruit doth your perfection yield you, say! Unless to men who work you ill good repay |
| Explanation: Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 987 |
| 8 இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் |
| பொருள்(விளக்கம்): சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல |
| Transliteration: Inmai Oruvarku Ilivandru SaalpennumThinmai Un Taakap Perin |
| Couplet: To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good |
| Explanation: Poverty is no disgrace to one who abounds in good qualities |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 988 |
| 9 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார் |
| பொருள்(விளக்கம்): தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள் |
| Transliteration: Oozhi Peyarinum Thaampeyaraar SaandraanmaikkuAazhi Enappatu Vaar |
| Couplet: Call them of perfect virtue's sea the shore, Who, though the fates should fail, fail not for evermore |
| Explanation: Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 989 |
| 10 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான் தாங்காது மன்னோ பொறை |
| பொருள்(விளக்கம்): சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது |
| Transliteration: Saandravar Saandraanmai Kundrin IrunilandhaanThaangaadhu Manno Porai |
| Couplet: The mighty earth its burthen to sustain must cease, If perfect virtue of the perfect men decrease |
| Explanation: If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 99 - சான்றாண்மை, குறள் : 990 |