srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

32. இன்னாசெய்யாமை

1  சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
பொருள்(விளக்கம்): மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்
Transliteration: Sirappeenum Selvam Perinum Pirarkku InnaaSeyyaamai Maasatraar Kol
Couplet: Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure
Explanation: It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 311
2  கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
பொருள்(விளக்கம்): சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்
Transliteration: Karuththuinnaa Seydhavak Kannum MaruththinnaaSeyyaamai Maasatraar Kol
Couplet: Though malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure
Explanation: It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 312
3  செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்
பொருள்(விளக்கம்): யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்
Transliteration: Seyyaamal Setraarkkum Innaadha SeydhapinUyyaa Vizhuman Tharum
Couplet: Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring
Explanation: In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 313
4  இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
பொருள்(விளக்கம்): நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்
Transliteration: Innaasey Thaarai Oruththal AvarnaanaNannayanj Cheydhu Vital
Couplet: To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by
Explanation: The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 314
5  அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை
பொருள்(விளக்கம்): பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை
Transliteration: Arivinaan Aakuva Thunto PiridhinnoiThannoipol Potraak Katai
Couplet: From wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain
Explanation: What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 315
6  இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்
பொருள்(விளக்கம்): ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்
Transliteration: Innaa Enaththaan Unarndhavai ThunnaamaiVentum Pirankan Seyal
Couplet: What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain
Explanation: Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 316
7  எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
பொருள்(விளக்கம்): எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்
Transliteration: Enaiththaanum Egngnaandrum Yaarkkum ManaththaanaamMaanaasey Yaamai Thalai
Couplet: To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise
Explanation: It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 317
8  தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்
பொருள்(விளக்கம்): பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?
Transliteration: Thannuyirkaku Ennaamai Thaanarivaan EnkoloMannuyirkku Innaa Seyal
Couplet: Whose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man
Explanation: Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 318
9  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
பொருள்(விளக்கம்): பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்
Transliteration: Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku InnaaPirpakal Thaame Varum
Couplet: If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you
Explanation: If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 319
10  நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
பொருள்(விளக்கம்): தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது
Transliteration: Noyellaam Noiseydhaar Melavaam NoiseyyaarNoyinmai Ventu Pavar
Couplet: O'er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill
Explanation: Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 32 - இன்னாசெய்யாமை, குறள் : 320
Page 32 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com