
91. பெண்வழிச்சேறல்
| 1 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது |
| பொருள்(விளக்கம்): கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள் |
| Transliteration: Manaivizhaivaar Maanpayan Eydhaar VinaivizhaiyaarVentaap Porulum Adhu |
| Couplet: Who give their soul to love of wife acquire not nobler gain; Who give their soul to strenuous deeds such meaner joys disdain |
| Explanation: Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 901 |
| 2 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும் |
| பொருள்(விளக்கம்): எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும் |
| Transliteration: Penaadhu Penvizhaivaan Aakkam PeriyadhorNaanaaka Naanuth Tharum |
| Couplet: Who gives himself to love of wife, careless of noble name His wealth will clothe him with o'erwhelming shame |
| Explanation: The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself; |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 902 |
| 3 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் |
| பொருள்(விளக்கம்): நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும் |
| Transliteration: Illaalkan Thaazhndha Iyalpinmai EgngnaandrumNallaarul Naanuth Tharum |
| Couplet: Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the good |
| Explanation: The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 903 |
| 4 மனையாளை யஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று |
| பொருள்(விளக்கம்): மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை |
| Transliteration: Manaiyaalai Anjum Marumaiyi LaalanVinaiyaanmai Veereydha Lindru |
| Couplet: No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thought |
| Explanation: The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 904 |
| 5 இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் |
| பொருள்(விளக்கம்): எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான் |
| Transliteration: Illaalai Anjuvaan Anjumar RegngnaandrumNallaarkku Nalla Seyal |
| Couplet: Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to do |
| Explanation: He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 905 |
| 6 இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள் அமையார்தோ ளஞ்சு பவர் |
| பொருள்(விளக்கம்): அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது |
| Transliteration: Imaiyaarin Vaazhinum Paatilare IllaalAmaiyaardhol Anju Pavar |
| Couplet: Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, Those have no dignity who fear the housewife's slender arm |
| Explanation: They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 906 |
| 7 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து |
| பொருள்(விளக்கம்): ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும் |
| Transliteration: Penneval Seydhozhukum Aanmaiyin NaanutaipPenne Perumai Utaiththu |
| Couplet: The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwells |
| Explanation: Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 907 |
| 8 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர் |
| பொருள்(விளக்கம்): ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள் |
| Transliteration: Nattaar Kuraimutiyaar Nandraatraar NannudhalaalPettaangu Ozhuku Pavar |
| Couplet: Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform |
| Explanation: Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 908 |
| 9 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்கண் இல் |
| பொருள்(விளக்கம்): ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது |
| Transliteration: Aravinaiyum Aandra Porulum PiravinaiyumPeneval Seyvaarkan Il |
| Couplet: No virtuous deed, no seemly wealth, no pleasure, rests With them who live obedient to their wives' behests |
| Explanation: From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 909 |
| 10 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல் |
| பொருள்(விளக்கம்): சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள் |
| Transliteration: Enserndha Nenjath Thitanutaiyaarkku EgngnaandrumPenserndhaam Pedhaimai Il |
| Couplet: Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, Folly, that springs from overweening woman's love, is never found |
| Explanation: The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 91 - பெண்வழிச்சேறல், குறள் : 910 |