
71. குறிப்பறிதல்
| 1 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி |
| பொருள்(விளக்கம்): ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான் |
| Transliteration: 701 Kooraamai Nokkake Kuripparivaan EgngnaandrumMaaraaneer Vaiyak Kani |
| Couplet: Who knows the sign, and reads unuttered thought, the gem is he, Of earth round traversed by the changeless sea |
| Explanation: The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 701 |
| 2 ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் |
| பொருள்(விளக்கம்): ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம் |
| Transliteration: Aiyap Pataaadhu Akaththadhu UnarvaanaithTheyvaththo Toppak Kolal |
| Couplet: Undoubting, who the minds of men can scan, As deity regard that gifted man |
| Explanation: He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 702 |
| 3 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல் |
| பொருள்(விளக்கம்): ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும் |
| Transliteration: Kurippir Kurippunar Vaarai UruppinulYaadhu Kotuththum Kolal |
| Couplet: Who by the sign the signs interprets plain, Give any member up his aid to gain |
| Explanation: The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 703 |
| 4 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு |
| பொருள்(விளக்கம்): உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள் |
| Transliteration: Kuriththadhu Kooraamaik Kolvaaro TenaiUruppo Ranaiyaraal Veru |
| Couplet: Who reads what's shown by signs, though words unspoken be, In form may seem as other men, in function nobler far is he |
| Explanation: Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 704 |
| 5 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் |
| பொருள்(விளக்கம்): ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்? |
| Transliteration: Kurippir Kurippunaraa Vaayin UruppinulEnna Payaththavo Kan? |
| Couplet: By sign who knows not sings to comprehend, what gain, 'Mid all his members, from his eyes does he obtain |
| Explanation: Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 705 |
| 6 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் |
| பொருள்(விளக்கம்): கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும் |
| Transliteration: Atuththadhu Kaattum Palingupol NenjamKatuththadhu Kaattum Mukam |
| Couplet: As forms around in crystal mirrored clear we find, The face will show what's throbbing in the mind |
| Explanation: As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 706 |
| 7 முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் |
| பொருள்(விளக்கம்): உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை |
| Transliteration: Mukaththin Mudhukkuraindhadhu Unto UvappinumKaayinum Thaanmun Thurum |
| Couplet: Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, 'tis the first herald still |
| Explanation: Is there anything so full of knowledge as the face ? (No) it precedes the mind, whether (the latter is) pleased or vexed |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 707 |
| 8 முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி உற்ற துணர்வார்ப் பெறின் |
| பொருள்(விளக்கம்): அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது |
| Transliteration: Mukamnokki Nirka Amaiyum AkamnokkiUtra Thunarvaarp Perin |
| Couplet: To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thought |
| Explanation: If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 708 |
| 9 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் |
| பொருள்(விளக்கம்): பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள் |
| Transliteration: Pakaimaiyum Kenmaiyum Kannuraikkum KanninVakaimai Unarvaarp Perin |
| Couplet: The eye speaks out the hate or friendly soul of man; To those who know the eye's swift varying moods to scan |
| Explanation: If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 709 |
| 10 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற |
| பொருள்(விளக்கம்): நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை |
| Transliteration: Nunniyam Enpaar Alakkungol KaanungaalKannalladhu Illai Pira |
| Couplet: The men of keen discerning soul no other test apply (When you their secret ask) than man's revealing eye |
| Explanation: The measuring-rod of those (ministers) who say 'we are acute' will on inquiry be found to be their (own) eyes and nothing else |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 71 - குறிப்பறிதல், குறள் : 710 |