
77. படைமாட்சி
| 1 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை |
| பொருள்(விளக்கம்): சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும் |
| Transliteration: Sirumaiyum Sellaath Thuniyum VarumaiyumIllaayin Vellum Patai |
| Couplet: Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory |
| Explanation: An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 761 |
| 2 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் |
| பொருள்(விளக்கம்): உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது |
| Transliteration: Nilaimakkal Saala Utaiththeninum ThaanaiThalaimakkal Ilvazhi Il |
| Couplet: Though men abound, all ready for the war, No army is where no fit leaders are |
| Explanation: Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 762 |
| 3 உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை |
| பொருள்(விளக்கம்): எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும் |
| Transliteration: Uruppamaindhu Ooranjaa Velpatai VendhanVerukkaiyul Ellaam Thalai |
| Couplet: A conquering host, complete in all its limbs, that fears no wound, Mid treasures of the king is chiefest found |
| Explanation: The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 763 |
| 4 உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது |
| பொருள்(விளக்கம்): போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது |
| Transliteration: Ulaivitaththu Ooranjaa Vankan TholaivitaththuthTholpataik Kallaal Aridhu |
| Couplet: In adverse hour, to face undaunted might of conquering foe, Is bravery that only veteran host can show |
| Explanation: Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 764 |
| 5 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் |
| பொருள்(விளக்கம்): எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள் |
| Transliteration: Oliththakkaal Ennaam Uvari Ela�ppakaiNaakam Uyirppak Ketum |
| Couplet: Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they die |
| Explanation: What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 765 |
| 6 அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை |
| பொருள்(விளக்கம்): எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும் |
| Transliteration: Azhivindri Araipokaa Thaaki VazhivandhaVanka Nadhuve Patai |
| Couplet: That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famed |
| Explanation: That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 766 |
| 7 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை |
| பொருள்(விளக்கம்): உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும் |
| Transliteration: Kootrutandru Melvarinum Kooti EdhirnirkumAatra Ladhuve Patai |
| Couplet: That is a 'host' that joins its ranks, and mightily withstands, Though death with sudden wrath should fall upon its bands |
| Explanation: That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 767 |
| 8 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு |
| பொருள்(விளக்கம்): வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் |
| Transliteration: Maramaanam Maanta Vazhichchelavu ThetramEnanaanke Emam Pataikku |
| Couplet: Valour with honour, sure advance in glory's path, with confidence; To warlike host these four are sure defence |
| Explanation: Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 768 |
| 9 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து |
| பொருள்(விளக்கம்): களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும் |
| Transliteration: Thaardhaangich Chelvadhu Thaanai ThalaivandhaPordhaangum Thanmai Arindhu |
| Couplet: A valiant army bears the onslaught, onward goes, Well taught with marshalled ranks to meet their coming foes |
| Explanation: That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 769 |
| 10 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் |
| பொருள்(விளக்கம்): போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும் |
| Transliteration: Ataldhakaiyum Aatralum Illeninum ThaanaiPataiththakaiyaal Paatu Perum |
| Couplet: Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilled |
| Explanation: Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 77 - படைமாட்சி, குறள் : 770 |