srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

112. நலம் புனைந்துரைதல்

1  நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
பொருள்(விளக்கம்): அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி
Transliteration: Nanneerai Vaazhi Anichchame NinninumMenneeral Yaamveezh Paval
Couplet: O flower of the sensitive plant! than thee
More tender's the maiden beloved by me
Explanation: May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than you
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1111
2  மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று
பொருள்(விளக்கம்): மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது
Transliteration: Malarkaanin Maiyaaththi Nenje IvalkanPalarkaanum Poovokkum Endru
Couplet: You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole
Explanation: O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1112
3  முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
பொருள்(விளக்கம்): முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!
Transliteration: Murimeni Muththam Muruval VerinaatramVelunkan Veyththo Lavatku
Couplet: As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
Darts are the eyes of her whose shoulders like the bambu bend
Explanation: The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1113
4  காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று
பொருள்(விளக்கம்): என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்
Transliteration: Kaanin Kuvalai Kavizhndhu NilannokkumMaanizhai Kannovvem Endru
Couplet: The lotus, seeing her, with head demiss, the ground would eye,
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.'
Explanation: If the blue lotus could see, it would stoop and look at the ground saying, 'I can never resemble the eyes of this excellent jewelled one.'
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1114
5  அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை
பொருள்(விளக்கம்): அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்
Transliteration: Anichchappook Kaalkalaiyaal Peydhaal NukappirkuNalla Pataaa Parai
Couplet: The flowers of the sensitive plant as a girdle around her she placed;
The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist
Explanation: No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1115
6  மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்
பொருள்(விளக்கம்): மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன
Transliteration: Madhiyum Matandhai Mukanum AriyaaPadhiyin Kalangiya Meen
Couplet: The stars perplexed are rushing wildly from their spheres;
For like another moon this maiden's face appears
Explanation: The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1116
7  அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து
பொருள்(விளக்கம்): தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!
Transliteration: Aruvaai Niraindha Avirmadhikkup PolaMaruvunto Maadhar Mukaththu
Couplet: In moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here
Explanation: Could there be spots in the face of this maid like those in the bright full moon ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1117
8  மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
பொருள்(விளக்கம்): முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக
Transliteration: Maadhar Mukampol Olivita VallaiyelKaadhalai Vaazhi Madhi
Couplet: Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine
Explanation: If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1118
9  மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
பொருள்(விளக்கம்): நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்
Transliteration: Malaranna Kannaal Mukamoththi YaayinPalarkaanath Thondral Madhi
Couplet: If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see
Explanation: O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1119
10  அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
பொருள்(விளக்கம்): அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை
Transliteration: Anichchamum Annaththin Thooviyum MaadharAtikku Nerunjip Pazham
Couplet: The flower of the sensitive plant, and the down on the swan's white breast,
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed
Explanation: The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 112 - நலம் புனைந்துரைதல், குறள் : 1120
Page 112 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com