srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

76. பொருள் செயல்வகை

1  பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
பொருள்(விளக்கம்): மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை
Transliteration: Porulal Lavaraip Porulaakach CheyyumPorulalladhu Illai Porul
Couplet: Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man
Explanation: Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 751
2  இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
பொருள்(விளக்கம்): பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது
Transliteration: Illaarai Ellaarum Elluvar SelvaraiEllaarum Seyvar Sirappu
Couplet: Those who have nought all will despise;
All raise the wealthy to the skies
Explanation: All despise the poor; (but) all praise the rich
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 752
3  பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
பொருள்(விளக்கம்): பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது
Transliteration: Porulennum Poiyaa Vilakkam IrularukkumEnniya Theyaththuch Chendru
Couplet: Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command
Explanation: The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein)
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 753
4  அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
பொருள்(விளக்கம்): தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்
Transliteration: Araneenum Inpamum Eenum ThiranarindhuTheedhindri Vandha Porul
Couplet: Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight
Explanation: The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 754
5  அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
பொருள்(விளக்கம்): பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்
Transliteration: Arulotum Anpotum Vaaraap PorulaakkamPullaar Purala Vital
Couplet: Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace
Explanation: (Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 755
6  உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்
பொருள்(விளக்கம்): வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்
Transliteration: Uruporulum Ulku Porulumdhan OnnaarthTheruporulum Vendhan Porul
Couplet:
Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
Explanation: The spoils of slaughtered foes; these are the royal revenues
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 756
7  அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு
பொருள்(விளக்கம்): அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்
Transliteration: Arulennum Anpeen Kuzhavi PorulennumSelvach Cheviliyaal Untu
Couplet: 'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears
Explanation: The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 757
8  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
பொருள்(விளக்கம்): தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது
Transliteration: Kundreri Yaanaip Por Kantatraal ThankaiththondruUntaakach Cheyvaan Vinai
Couplet: As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand
Explanation: An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 758
9  செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்
பொருள்(விளக்கம்): பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது
Transliteration: Seyka Porulaich Cherunar SerukkarukkumEqkadhanir Kooriya Thil
Couplet: Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known
Explanation: Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 759
10  ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு
பொருள்(விளக்கம்): அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்
Transliteration: Onporul Kaazhppa Iyatriyaarkku EnporulEnai Irantum Orungu
Couplet: Who plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained
Explanation: To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)
பால் : பொருட்பால், அதிகாரம் : 76 - பொருள் செயல்வகை, குறள் : 760
Page 76 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com