srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

117. படர்மெலிந்திரங்கல்

1  மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்
பொருள்(விளக்கம்): இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்
Transliteration: Maraippenman Yaaniqdho Noyai IraippavarkkuOotruneer Pola Mikum
Couplet: I would my pain conceal, but see! it surging swells,
As streams to those that draw from ever-springing wells
Explanation: I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1161
2  கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்
பொருள்(விளக்கம்): காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை
Transliteration: Karaththalum Aatrenin Noyainoi SeydhaarkkuUraiththalum Naanuth Tharum
Couplet: I cannot hide this pain of mine, yet shame restrains
When I would tell it out to him who caused my pains
Explanation: I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1162
3  காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து
பொருள்(விளக்கம்): பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது
Transliteration: Kaamamum Naanum Uyirkaavaath ThoongumenNonaa Utampin Akaththu
Couplet: My soul, like porter's pole, within my wearied frame,
Sustains a two-fold burthen poised, of love and shame
Explanation: (Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1163
4  காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்
பொருள்(விளக்கம்): காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை
Transliteration: Kaamak Katalmannum Unte AdhuneendhumEmap Punaimannum Il
Couplet: A sea of love, 'tis true, I see stretched out before,
But not the trusty bark that wafts to yonder shore
Explanation: There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1164
5  துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்
பொருள்(விளக்கம்): நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?
Transliteration: Thuppin Evanaavar Mankol ThuyarvaravuNatpinul Aatru Pavar
Couplet: Who work us woe in friendship's trustful hour,
What will they prove when angry tempests lower
Explanation: What will they prove when angry tempests lower?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1165
6  இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது
பொருள்(விளக்கம்): காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது
Transliteration: Inpam Katalmatruk Kaamam AqdhatungaalThunpam Adhanir Peridhu
Couplet: A happy love 's sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul
Explanation: The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1166
7  காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்
பொருள்(விளக்கம்): நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்
Transliteration: Kaamak Katumpunal Neendhik KaraikaanenYaamaththum Yaane Ulen
Couplet: I swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, 'mid the waters, only I
Explanation: I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1167
8  மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை
பொருள்(விளக்கம்): `இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'
Transliteration: Mannuyir Ellaam Thuyitri AliththiraaEnnalladhu Illai Thunai
Couplet: All living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps
Explanation: The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1168
9  கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா
பொருள்(விளக்கம்): இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது
Transliteration: Kotiyaar Kotumaiyin Thaamkotiya InnaalNetiya Kazhiyum Iraa
Couplet: More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone
Explanation: The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1169
10  உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்
பொருள்(விளக்கம்): காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது
Transliteration: Ullampondru Ulvazhich Chelkirpin VellaneerNeendhala Mannoen Kan
Couplet: When eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim
Explanation: Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 117 - படர்மெலிந்திரங்கல், குறள் : 1170
Page 117 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com