
43. அறிவுடைமை
| 1 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் |
| பொருள்(விளக்கம்): பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான் |
| Transliteration: 421 Arivatrang Kaakkung Karuvi SeruvaarkkumUllazhikka Laakaa Aran |
| Couplet: True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defy |
| Explanation: Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 421 |
| 2 சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு |
| பொருள்(விளக்கம்): மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும் |
| Transliteration: Sendra Itaththaal Selavitaa TheedhoreeiNandrinpaal Uyppa Tharivu |
| Couplet: Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of good |
| Explanation: Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 422 |
| 3 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு |
| பொருள்(விளக்கம்): எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் |
| Transliteration: Epporul Yaaryaarvaaik Ketpinum ApporulMeypporul Kaanpa Tharivu |
| Couplet: Though things diverse from divers sages' lips we learn, 'Tis wisdom's part in each the true thing to discern |
| Explanation: To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 423 |
| 4 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு |
| பொருள்(விளக்கம்): நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும் |
| Transliteration: Enporula Vaakach Chelachchollith ThaanpirarvaaiNunporul Kaanpa Tharivu |
| Couplet: Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes in |
| Explanation: To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 424 |
| 5 உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு |
| பொருள்(விளக்கம்): உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும் |
| Transliteration: Ulakam Thazheeiya Thotpam MalardhalumKoompalum Illa Tharivu |
| Couplet: Wisdom embraces frank the world, to no caprice exposed; Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed |
| Explanation: To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 425 |
| 6 எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு |
| பொருள்(விளக்கம்): உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும் |
| Transliteration: Evva Thuraivadhu Ulakam UlakaththotuAvva Thuraiva Tharivu |
| Couplet: As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well |
| Explanation: To live as the world lives, is wisdom |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 426 |
| 7 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் |
| பொருள்(விளக்கம்): ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள் |
| Transliteration: Arivutaiyaar Aava Tharivaar ArivilaarAqdhari Kallaa Thavar |
| Couplet: The wise discern, the foolish fail to see, And minds prepare for things about to be |
| Explanation: The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 427 |
| 8 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் |
| பொருள்(விளக்கம்): அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள் |
| Transliteration: Anjuva Thanjaamai Pedhaimai AnjuvadhuAnjal Arivaar Thozhil |
| Couplet: Folly meets fearful ills with fearless heart; To fear where cause of fear exists is wisdom's part |
| Explanation: Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 428 |
| 9 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் |
| பொருள்(விளக்கம்): வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது |
| Transliteration: Edhiradhaak Kaakkum Arivinaark KillaiAdhira Varuvadhor Noi |
| Couplet: The wise with watchful soul who coming ills foresee; From coming evil's dreaded shock are free |
| Explanation: No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 429 |
| 10 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர் |
| பொருள்(விளக்கம்): அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை |
| Transliteration: Arivutaiyaar Ellaa Mutaiyaar ArivilaarEnnutaiya Renum Ilar |
| Couplet: The wise is rich, with ev'ry blessing blest; The fool is poor, of everything possessed |
| Explanation: Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 43 - அறிவுடைமை, குறள் : 430 |