
68. வினை செயல்வகை
| 1 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது |
| பொருள்(விளக்கம்): ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும் |
| Transliteration: Soozhchchi Mutivu Thuniveydhal AththunivuThaazhchchiyul Thangudhal Theedhu |
| Couplet: The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault |
| Explanation: Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 671 |
| 2 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை |
| பொருள்(விளக்கம்): நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது |
| Transliteration: Thoonguka Thoongich Cheyarpaala ThoongarkaThoongaadhu Seyyum Vinai |
| Couplet: Slumber when sleepy work's in hand beware Thou slumber not when action calls for sleepless care |
| Explanation: Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 672 |
| 3 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் |
| பொருள்(விளக்கம்): இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும் இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும் |
| Transliteration: Ollumvaa Yellaam Vinainandre OllaakkaalSellumvaai Nokkich Cheyal |
| Couplet: When way is clear, prompt let your action be; When not, watch till some open path you see |
| Explanation: Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 673 |
| 4 வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் |
| பொருள்(விளக்கம்): எற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும் |
| Transliteration: Vinaipakai Endrirantin Echcham NinaiyungaalTheeyechcham Polath Therum |
| Couplet: With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring |
| Explanation: When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 674 |
| 5 பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல் |
| பொருள்(விளக்கம்): ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் |
| Transliteration: Porulkaruvi Kaalam Vinaiyitanotu AindhumIruldheera Ennich Cheyal |
| Couplet: Treasure and instrument and time and deed and place of act These five, till every doubt remove, think o'er with care exact |
| Explanation: Do an act after a due consideration of the (following) five, viz money, means, time, execution and place |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 675 |
| 6 முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல் |
| பொருள்(விளக்கம்): ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் |
| Transliteration: Mutivum Itaiyoorum Mutriyaangu EydhumPatupayanum Paarththuch Cheyal |
| Couplet: Accomplishment, the hindrances, large profits won By effort these compare,- then let the work be done |
| Explanation: An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 676 |
| 7 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல் |
| பொருள்(விளக்கம்): ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் |
| Transliteration: Seyvinai Seyvaan Seyanmurai AvvinaiUllarivaan Ullam Kolal |
| Couplet: Who would succeed must thus begin first let him ask The thoughts of them who thoroughly know the task |
| Explanation: The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 677 |
| 8 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று |
| பொருள்(விளக்கம்): ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும் |
| Transliteration: Vinaiyaan Vinaiyaakkik Kotal NanaikavulYaanaiyaal Yaanaiyaath Thatru |
| Couplet: By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sent |
| Explanation: To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 678 |
| 9 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் |
| பொருள்(விளக்கம்): நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும் |
| Transliteration: Nattaarkku Nalla Seyalin ViraindhadheOttaarai Ottik Kolal |
| Couplet: Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you |
| Explanation: One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 679 |
| 10 உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் கொள்வர் பெரியார்ப் பணிந்து |
| பொருள்(விளக்கம்): தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள் |
| Transliteration: Uraisiriyaar Ulnatungal Anjik KuraiperinKolvar Periyaarp Panindhu |
| Couplet: The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the head |
| Explanation: Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 68 - வினை செயல்வகை, குறள் : 680 |