
118. கண்விதுப்பழிதல்
| 1 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண் |
| பொருள்(விளக்கம்): என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே! |
| Transliteration: Penaadhu Pettaar Ularmanno MatravarkKaanaadhu Amaivila Kan |
| Couplet: Who loved me once, onloving now doth here remain; Not seeing him, my eye no rest can gain |
| Explanation: He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1171 |
| 2 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் |
| பொருள்(விளக்கம்): இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும் |
| Transliteration: Vaaraakkaal Thunjaa Varindhunjaa AayitaiAaragnar Utrana Kan |
| Couplet: When he comes not, all slumber flies; no sleep when he is there; Thus every way my eyes have troubles hard to bear |
| Explanation: When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1172 |
| 3 மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து |
| பொருள்(விளக்கம்): காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல |
| Transliteration: Maraiperal Ooraarkku Aridhandraal EmpolAraiparai Kannaar Akaththu |
| Couplet: It is not hard for all the town the knowledge to obtain, When eyes, as mine, like beaten tambours, make the mystery plain |
| Explanation: It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1173 |
| 4 கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது |
| பொருள்(விளக்கம்): கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்? |
| Transliteration: Kandhaam Kaluzhva Thevankolo ThantaanoiThaamkaatta Yaamkan Tadhu |
| Couplet: They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complain |
| Explanation: As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him) |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1174 |
| 5 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்ப தெவன் |
| பொருள்(விளக்கம்): விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்? |
| Transliteration: Therindhunaraa Nokkiya Unkan ParindhunaraapPaidhal Uzhappadhu Evan? |
| Couplet: How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away |
| Explanation: The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault) |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1175 |
| 6 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து |
| பொருள்(விளக்கம்): தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும் |
| Transliteration: Kadhumenath Thaanokkith Thaame KaluzhumIthunakath Thakka Thutaiththu |
| Couplet: The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile |
| Explanation: They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1176 |
| 7 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து |
| பொருள்(விளக்கம்): தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன |
| Transliteration: Peyalaatraa Neerulandha Unkan UyalaatraaUyvilnoi Enkan Niruththu |
| Couplet: Those eyes have wept till all the fount of tears is dry, That brought upon me pain that knows no remedy |
| Explanation: These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1177 |
| 8 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக் காமநோய் செய்தவென் கண் |
| பொருள்(விளக்கம்): கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன |
| Transliteration: Patalaatraa Paidhal Uzhakkum KatalaatraakKaamanoi Seydhaen Kan |
| Couplet: The eye that wrought me more than sea could hold of woes, Is suffering pangs that banish all repose |
| Explanation: Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1178 |
| 9 ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது |
| பொருள்(விளக்கம்): ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே! |
| Transliteration: Oo Inidhe Emakkinnoi SeydhakanThaaam Itharpat Tadhu |
| Couplet: Oho! how sweet a thing to see! the eye That wrought this pain, in the same gulf doth lie |
| Explanation: The eyes that have given me this disease have themselves been seized with this (suffering) Oh! I am much delighted |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1179 |
| 10 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண் |
| பொருள்(விளக்கம்): அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள் |
| Transliteration: Uzhandhuzhan Thulneer Aruka VizhaindhizhaindhuVenti Avarkkanta Kan |
| Couplet: Aching, aching, let those exhaust their stream, That melting, melting, that day gazed on him |
| Explanation: The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 118 - கண்விதுப்பழிதல், குறள் : 1180 |