srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

111. புணர்ச்சி மகிழ்தல்

1  கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
பொருள்(விளக்கம்): வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன
Transliteration: Kantukettu Untuyirththu Utrariyum AimpulanumOndhoti Kanne Ula
Couplet: All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
In this resplendent armlets-bearing damsel live
Explanation: The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1101
2  பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து
பொருள்(விளக்கம்): நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்
Transliteration: Pinikku Marundhu Piraman AniyizhaiThannoikkuth Thaane Marundhu
Couplet: Disease and medicine antagonists we surely see;
This maid, to pain she gives, herself is remedy
Explanation: The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1102
3  தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
பொருள்(விளக்கம்): தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?
Transliteration: Thaamveezhvaar Mendrol Thuyilin InidhukolThaamaraik Kannaan Ulaku
Couplet: Than rest in her soft arms to whom the soul is giv'n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven
Explanation: Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1103
4  நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
பொருள்(விளக்கம்): நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்
Transliteration: Neengin Theru�um Kurukungaal ThannennumTheeyaantup Petraal Ival?
Couplet: Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain
Explanation: From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1104
5  வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
பொருள்(விளக்கம்): விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன
Transliteration: Vetta Pozhudhin Avaiyavai PolumeThottaar Kadhuppinaal Thol
Couplet: In her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found
Explanation: Each varied form of joy the soul can wish is found
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1105
6  உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்
பொருள்(விளக்கம்): இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்
Transliteration: Urudhoru Uyirdhalirppath Theentalaal PedhaikkuAmizhdhin Iyandrana Thol
Couplet: Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again
Explanation: The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1106
7  தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
பொருள்(விளக்கம்): தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது
Transliteration: Thammil Irundhu Thamadhupaaththu UntatraalAmmaa Arivai Muyakku
Couplet: As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace
Explanation: The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1107
8  வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
பொருள்(விளக்கம்): காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்
Transliteration: Veezhum Iruvarkku Inidhe ValiyitaiPozhap Pataaa Muyakku
Couplet: Sweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds
Explanation: To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1108
9  ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்
பொருள்(விளக்கம்): ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்
Transliteration: Ootal Unardhal Punardhal IvaikaamamKootiyaar Petra Payan
Couplet: The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained
Explanation: Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1109
10  அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
பொருள்(விளக்கம்): மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது
Transliteration: Aridhoru Ariyaamai Kantatraal KaamamSeridhorum Seyizhai Maattu
Couplet: The more men learn, the more their lack of learning they detect;
'Tis so when I approach the maid with gleaming jewels decked
Explanation: As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a welladorned female (only create a desire for more)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 111 - புணர்ச்சி மகிழ்தல், குறள் : 1110
Page 111 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com