srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

106. இரவு

1  இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
பொருள்(விளக்கம்): கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல
Transliteration: Irakka Iraththakkaark Kaanin KarappinAvarpazhi Thampazhi Andru
Couplet: When those you find from whom 'tis meet to ask,- for aid apply;
Theirs is the sin, not yours, if they the gift deny
Explanation: If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1051
2  இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்
பொருள்(விளக்கம்): வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்
Transliteration: Inpam Oruvarku Iraththal IrandhavaiThunpam Uraaa Varin
Couplet: Even to ask an alms may pleasure give,
If what you ask without annoyance you receive
Explanation: Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs)
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1052
3  கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
பொருள்(விளக்கம்): உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்
Transliteration: Karappilaa Nenjin Katanarivaar MunnindruIrappumo Reer Utaiththu
Couplet: The men who nought deny, but know what's due, before their face
To stand as suppliants affords especial grace
Explanation: There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars)
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1053
4  இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு
பொருள்(விளக்கம்): இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்
Transliteration: Iraththalum Eedhale Polum KaraththalKanavilum Thetraadhaar Maattu
Couplet: Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream
Explanation: To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1054
5  கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது
பொருள்(விளக்கம்): உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்
Transliteration: Karappilaar Vaiyakaththu Unmaiyaal KannindruIrappavar Merkol Vadhu
Couplet: Because on earth the men exist, who never say them nay,
Men bear to stand before their eyes for help to pray
Explanation: As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1055
6  கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்
பொருள்(விளக்கம்): இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்
Transliteration: Karappitumpai Yillaaraik Kaanin NirappitumpaiEllaam Orungu Ketum
Couplet: It those you find from evil of 'denial' free,
At once all plague of poverty will flee
Explanation: All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1056
7  இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து
பொருள்(விளக்கம்): இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்
Transliteration: Ikazhndhellaadhu Eevaaraik Kaanin MakizhndhullamUllul Uvappadhu Utaiththu
Couplet: If men are found who give and no harsh words of scorn employ,
The minds of askers, through and through, will thrill with joy
Explanation: Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1057
8  இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
பொருள்(விளக்கம்): வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை
Transliteration: Irappaarai Illaayin Eernganmaa GnaalamMarappaavai Sendruvan Thatru
Couplet: If askers cease, the mighty earth, where cooling fountains flow,
Will be a stage where wooden puppets come and go
Explanation: If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1058
9  ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
பொருள்(விளக்கம்): இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்
Transliteration: Eevaarkan Ennuntaam Thotram IrandhukolMevaar Ilaaak Katai
Couplet: What glory will there be to men of generous soul,
When none are found to love the askers' role
Explanation: What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them)
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1059
10  இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
பொருள்(விளக்கம்): இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே
Transliteration: Irappaan Vekulaamai Ventum NirappitumpaiThaaneyum Saalum Kari
Couplet: Askers refused from wrath must stand aloof;
The plague of poverty itself is ample proof
Explanation: He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing)
பால் : பொருட்பால், அதிகாரம் : 106 - இரவு, குறள் : 1060
Page 106 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com