srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

109. தகயணங்குருத்தல்

1  அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
பொருள்(விளக்கம்): எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்
Transliteration: Anangukol Aaimayil Kollo KananguzhaiMaadharkol Maalum En Nenju
Couplet: Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind
Explanation: Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1081
2  நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
பொருள்(விளக்கம்): அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது
Transliteration: Nokkinaal Nokkedhir Nokkudhal ThaakkananguThaanaikkon Tanna Thutaiththu
Couplet: She of the beaming eyes, To my rash look her glance replies,
As if the matchless goddess' hand Led forth an armed band
Explanation: This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1082
3  பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
பொருள்(விளக்கம்): கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை
Transliteration: Pantariyen Kootren Padhanai IniyarindhenPentakaiyaal Peramark Kattu
Couplet: Death's form I formerly Knew not; but now 'tis plain to me;
He comes in lovely maiden's guise, With soul-subduing eyes
Explanation: I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1083
4  கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
பொருள்(விளக்கம்): பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?
Transliteration: Kantaar Uyirunnum Thotraththaal PentakaipPedhaikku Amarththana Kan
Couplet: In sweet simplicity, A woman's gracious form hath she;
But yet those eyes, that drink my life, Are with the form at strife
Explanation: These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1084
5  கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
பொருள்(விளக்கம்): உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே
Transliteration: Kootramo Kanno Pinaiyo MatavaralNokkamim Moondrum Utaiththu
Couplet: The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?
Or fawn's shy glance? All three appear In form of maiden here
Explanation: Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1085
6  கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
பொருள்(விளக்கம்): புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா
Transliteration: Kotumpuruvam Kotaa Maraippin NatungagnarSeyyala Manival Kan
Couplet: If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart
Explanation: Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1086
7  கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
பொருள்(விளக்கம்): மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது
Transliteration: Kataaak Kalitrinmer Katpataam MaadharPataaa Mulaimel Thukil
Couplet: As veil o'er angry eyes Of raging elephant that lies,
The silken cincture's folds invest This maiden's panting breast
Explanation: The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1087
8  ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு
பொருள்(விளக்கம்): களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!
Transliteration: Onnudhar Koo Utaindhadhe GnaatpinulNannaarum Utkumen Peetu
Couplet: Ah woe is me my might, That awed my foemen in the fight,
By lustre of that beaming brow Borne down, lies broken now
Explanation: On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1088
9  பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து
பொருள்(விளக்கம்): பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?
Transliteration: Pinaiyer Matanokkum Naanum UtaiyaatkuAniyevano Edhila Thandhu
Couplet: Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament
Explanation: Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1089
10  உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
பொருள்(விளக்கம்): மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்
Transliteration: Untaarkan Alladhu Atunaraak KaamampolKantaar Makizhseydhal Indru
Couplet: The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
But love hath rare felicity For those that only see
Explanation: Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 109 - தகயணங்குருத்தல், குறள் : 1090
Page 109 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com