srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

119. பசப்புறு பருவரல்

1  நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற
பொருள்(விளக்கம்): என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
Transliteration: Nayandhavarkku Nalkaamai Nerndhen PasandhavenPanpiyaarkku Uraikko Pira
Couplet: I willed my lover absent should remain;
Of pining's sickly hue to whom shall I complain
Explanation: I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1181
2  அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு
பொருள்(விளக்கம்): பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!
Transliteration: Avardhandhaar Ennum Thakaiyaal IvardhandhenMenimel Oorum Pasappu
Couplet: 'He gave': this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes
Explanation: Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1182
3  சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
பொருள்(விளக்கம்): காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்
Transliteration: Saayalum Naanum Avarkontaar KaimmaaraaNoyum Pasalaiyum Thandhu
Couplet: Of comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left
Explanation: He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1183
4  உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு
பொருள்(விளக்கம்): யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
Transliteration: Ulluvan Manyaan Uraippadhu AvardhiramaalKallam Piravo Pasappu
Couplet: I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray
Explanation: I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1184
5  உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது
பொருள்(விளக்கம்): என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்
Transliteration: Uvakkaanem Kaadhalar Selvaar IvakkaanenMeni Pasappoor Vadhu
Couplet: My lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home
Explanation: Just as my lover departed then, did not sallowness spread here on my person ?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1185
6  விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
பொருள்(விளக்கம்): விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது
Transliteration: Vilakkatram Paarkkum Irulepol KonkanMuyakkatram Paarkkum Pasappu
Couplet: As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace
Explanation: Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1186
7  புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
பொருள்(விளக்கம்): தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
Transliteration: Pullik Kitandhen Putaipeyarndhen AvvalavilAllikkol Vatre Pasappu
Couplet: I lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me
Explanation: I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1187
8  பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்
பொருள்(விளக்கம்): இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே
Transliteration: Pasandhaal Ivalenpadhu Allaal IvalaithThurandhaar Avarenpaar Il
Couplet: On me, because I pine, they cast a slur;
But no one says, 'He first deserted her.'
Explanation: Besides those who say 'she has turned sallow' there are none who say 'he has forsaken her'
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1188
9  பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்
பொருள்(விளக்கம்): பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!
Transliteration: Pasakkaman Pattaangen Meni NayappiththaarNannilaiyar Aavar Enin
Couplet: Well let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain
Explanation: If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1189
10  பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்
பொருள்(விளக்கம்): என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!
Transliteration: Pasappenap Perperudhal Nandre NayappiththaarNalkaamai Thootraar Enin
Couplet: 'Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain
Explanation: It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 119 - பசப்புறு பருவரல், குறள் : 1190
Page 119 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com