srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

57. வெருவந்தசெயாமை

1  கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்
பொருள்(விளக்கம்): கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்
Transliteration: Katunjollan Kannilan Aayin NetunjelvamNeetindri Aange Ketum
Couplet: The tyrant, harsh in speach and hard of eye,
His ample joy, swift fading, soon shall die
Explanation: The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 561
2  கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
பொருள்(விளக்கம்): கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்
Transliteration: Katumozhiyum Kaiyikandha Thantamum VendhanAtumuran Theykkum Aram
Couplet: Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch's conquering might
Explanation: Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies)
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 562
3  இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு
பொருள்(விளக்கம்): கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்
Transliteration: Inaththaatri Ennaadha Vendhan SinaththaatrichCheerir Sirukum Thiru
Couplet: Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o'er
Explanation: The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 563
4  செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
பொருள்(விளக்கம்): முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்
Transliteration: Seruvandha Pozhdhir Siraiseyyaa VendhanVeruvandhu Veydhu Ketum
Couplet: Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die
Explanation: The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 564
5  கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை
பொருள்(விளக்கம்): கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை
Transliteration: Kallaarp Pinikkum Katungol AdhuvalladhuIllai Nilakkup Porai
Couplet: Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear
Explanation: The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 565
6  தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
பொருள்(விளக்கம்): நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்
Transliteration: Thakkaangu Naatith Thalaichchellaa VannaththaalOththaangu Oruppadhu Vendhu
Couplet: Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he
Explanation: He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 566
7  கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
பொருள்(விளக்கம்): குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்
Transliteration: Katidhochchi Mella Erika NetidhaakkamNeengaamai Ventu Pavar
Couplet: For length of days with still increasing joys on Heav'n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall
Explanation: Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 567
8  வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
பொருள்(விளக்கம்): குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்
Transliteration: Veruvandha Seydhozhukum Vengola NaayinOruvandham Ollaik Ketum
Couplet: Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure
Explanation: The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 568
9  இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்
பொருள்(விளக்கம்): கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்
Transliteration: Iraikatiyan Endruraikkum Innaachchol VendhanUraikatuki Ollaik Ketum
Couplet: 'Ah! cruel is our king', where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay
Explanation: The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 569
10  அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து
பொருள்(விளக்கம்): யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்
Transliteration: Arunjevvi Innaa Mukaththaan PerunjelvamPeeykan Tannadhu Utaiththu
Couplet: Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance
Explanation: The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil
பால் : பொருட்பால், அதிகாரம் : 57 - வெருவந்தசெயாமை, குறள் : 570
Page 57 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com