srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

79. நட்பு

1  செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
பொருள்(விளக்கம்): நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை
Transliteration: Seyarkariya Yaavula Natpin AdhupolVinaikkariya Yaavula Kaappu
Couplet: What so hard for men to gain as friendship true
What so sure defence 'gainst all that foe can do
Explanation: What so sure defence 'gainst all that foe can do?
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 781
2  நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு
பொருள்(விளக்கம்): அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்
Transliteration: Niraineera Neeravar Kenmai PiraimadhipPinneera Pedhaiyaar Natpu
Couplet: Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon
Explanation: The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 782
3  நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
பொருள்(விளக்கம்): படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு
Transliteration: Navildhorum Noolnayam Polum PayildhorumPanputai Yaalar Thotarpu
Couplet: Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good
Explanation: Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 783
4  நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
பொருள்(விளக்கம்): நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்
Transliteration: Nakudhar Poruttandru Nattal MikudhikkanMersenaru Itiththar Poruttu
Couplet: Nor for laughter only friendship all the pleasant day,
But for strokes of sharp reproving, when from right you stray
Explanation: Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 784
5  புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
பொருள்(விளக்கம்): இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது
Transliteration: Punarchchi Pazhakudhal Ventaa UnarchchidhaanNatpaang Kizhamai Tharum
Couplet: Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind
Explanation: Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 785
6  முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
பொருள்(விளக்கம்): இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்
Transliteration: Mukanaka Natpadhu Natpandru NenjaththuAkanaka Natpadhu Natpu
Couplet: Not the face's smile of welcome shows the friend sincere,
But the heart's rejoicing gladness when the friend is near
Explanation: The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 786
7  அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
பொருள்(விளக்கம்): நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்
Transliteration: Azhivi Navaineekki Aaruyththu AzhivinkanAllal Uzhappadhaam Natpu
Couplet: Friendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps
Explanation: (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him)
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 787
8  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
பொருள்(விளக்கம்): அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்
Transliteration: Utukkai Izhandhavan Kaipola AangeItukkan Kalaivadhaam Natpu
Couplet: As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay
Explanation: (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly)
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 788
9  நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
பொருள்(விளக்கம்): மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்
Transliteration: Natpirku Veetrirukkai Yaadhenin KotpindriOllumvaai Oondrum Nilai
Couplet: And where is friendship's royal seat? In stable mind,
Where friend in every time of need support may find
Explanation: Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth)
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 789
10  இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
பொருள்(விளக்கம்): நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்
Transliteration: Inaiyar Ivaremakku Innamyaam EndruPunaiyinum Pullennum Natpu
Couplet: Mean is the friendship that men blazon forth,
'He's thus to me' and 'such to him my worth'
Explanation: Though friends may praise one another saying, 'He is so intimate with us, and we so much (with him)'; (still) such friendship will appear mean
பால் : பொருட்பால், அதிகாரம் : 79 - நட்பு, குறள் : 790
Page 79 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com