
115. அலரறிவுரைத்தல்
| 1 அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் |
| பொருள்(விளக்கம்): எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள் |
| Transliteration: Alarezha Aaruyir Na�rkum AdhanaipPalarariyaar Paakkiyath Thaal |
| Couplet: By this same rumour's rise, my precious life stands fast; Good fortune grant the many know this not |
| Explanation: My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1141 |
| 2 மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர் |
| பொருள்(விளக்கம்): அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது |
| Transliteration: Malaranna Kannaal Arumai AriyaadhuAlaremakku Eendhadhiv Voor |
| Couplet: The village hath to us this rumour giv'n, that makes her mine; Unweeting all the rareness of the maid with flower-like eyne |
| Explanation: Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1142 |
| 3 உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து |
| பொருள்(விளக்கம்): எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே! |
| Transliteration: Uraaadho Oorarindha Kelavai AdhanaipPeraaadhu Petranna Neerththu |
| Couplet: The rumour spread within the town, is it not gain to me? It is as though that were obtained that may not be |
| Explanation: Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already) |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1143 |
| 4 கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து |
| பொருள்(விளக்கம்): ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும் |
| Transliteration: Kavvaiyaal Kavvidhu Kaamam AdhuvindrelThavvennum Thanmai Izhandhu |
| Couplet: The rumour rising makes my love to rise; My love would lose its power and languish otherwise |
| Explanation: Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1144 |
| 5 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது |
| பொருள்(விளக்கம்): காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும் |
| Transliteration: Kaliththorum Kalluntal Vettatraal KaamamVelippatun Thorum Inidhu |
| Couplet: The more man drinks, the more he ever drunk would be; The more my love's revealed, the sweeter 'tis to me |
| Explanation: As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1145 |
| 6 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று |
| பொருள்(விளக்கம்): காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது |
| Transliteration: Kantadhu Mannum Orunaal AlarmannumThingalaip Paampukon Tatru |
| Couplet: I saw him but one single day: rumour spreads soon As darkness, when the dragon seizes on the moon |
| Explanation: It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1146 |
| 7 ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய் |
| பொருள்(விளக்கம்): ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது |
| Transliteration: Ooravar Kelavai Eruvaaka AnnaisolNeeraaka Neelumin Noi |
| Couplet: My anguish grows apace: the town's report Manures it; my mother's word doth water it |
| Explanation: This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1147 |
| 8 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் |
| பொருள்(விளக்கம்): ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும் |
| Transliteration: Neyyaal Erinudhuppem Endratraal KelavaiyaalKaamam Nudhuppem Enal |
| Couplet: With butter-oil extinguish fire! 'Twill prove Harder by scandal to extinguish love |
| Explanation: To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1148 |
| 9 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை |
| பொருள்(விளக்கம்): உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா? |
| Transliteration: Alarnaana Olvadho Anjalompu EndraarPalarnaana Neeththak Katai |
| Couplet: When he who said 'Fear not!' hath left me blamed, While many shrink, can I from rumour hide ashamed |
| Explanation: When the departure of him who said 'fear not' has put me to shame before others, why need I be ashamed of scandal |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1149 |
| 10 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்குமிவ் வூர் |
| பொருள்(விளக்கம்): யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார் |
| Transliteration: Thaamventin Nalkuvar Kaadhalar YaamventumKelavai Etukkumiv Voor |
| Couplet: If we desire, who loves will grant what we require; This town sends forth the rumour we desire |
| Explanation: The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him) |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 115 - அலரறிவுரைத்தல், குறள் : 1150 |