srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

4. அறன் வலியுறுத்தல்

1  அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
பொருள்(விளக்கம்): அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்
Transliteration: Araththaaru Ithuvena Ventaa SivikaiPoruththaanotu Oorndhaan Itai
Couplet: Needs not in words to dwell on virtue's fruits: compare
The man in litter borne with them that toiling bear
Explanation: The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 31
2  செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
பொருள்(விளக்கம்): பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்
Transliteration: Seyarpaala Thorum Arane OruvarkuUyarpaala Thorum Pazhi
Couplet: 'Virtue' sums the things that should be done;
'Vice' sums the things that man should shun
Explanation: That is virtue which each ought to do, and that is vice which each should shun
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 32
3  சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
பொருள்(விளக்கம்): சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
Transliteration: Sirappu Eenum Selvamum Eenum AraththinoounguAakkam Evano Uyirkku
Couplet: It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain
Explanation: Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 33
4  அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
பொருள்(விளக்கம்): நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை
Transliteration: Araththinooungu Aakkamum Illai AdhanaiMaraththalin Oongillai Ketu
Couplet: No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws
Explanation: There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 34
5  ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
பொருள்(விளக்கம்): செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்
Transliteration: Ollum Vakaiyaan Aravinai OvaadheSellumvaai Ellaanj Cheyal
Couplet: To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive
Explanation: As much as possible, in every way, incessantly practise virtue
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 35
6  மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
பொருள்(விளக்கம்): மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை
Transliteration: Manaththukkan Maasilan Aadhal Anaiththu AranAakula Neera Pira
Couplet: Spotless be thou in mind! This only merits virtue's name;
All else, mere pomp of idle sound, no real worth can claim
Explanation: Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 36
7  அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
பொருள்(விளக்கம்): பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்
Transliteration: Azhukkaaru Avaavekuli Innaachchol NaankumIzhukkaa Iyandradhu Aram
Couplet: 'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,
Lust, evil speech-these four, man onwards moves in ordered path
Explanation: That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 37
8  அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
பொருள்(விளக்கம்): பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்
Transliteration: Andrarivaam Ennaadhu Aranjeyka MatradhuPondrungaal Pondraath Thunai
Couplet: Do deeds of virtue now Say not, 'To-morrow we'll be wise';
Thus, when thou diest, shalt thou find a help that never dies
Explanation: Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 38
9  வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
பொருள்(விளக்கம்): பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்
Transliteration: Veezhnaal Pataaamai Nandraatrin AqdhoruvanVaazhnaal Vazhiyataikkum Kal
Couplet: If no day passing idly, good to do each day you toil,
A stone it will be to block the way of future days of moil
Explanation: If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 39
10  அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
பொருள்(விளக்கம்): தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது
Transliteration: Araththaan Varuvadhe Inpam Mar RellaamPuraththa Pukazhum Ila
Couplet: What from virtue floweth, yieldeth dear delight;
All else extern, is void of glory's light
Explanation: Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 4 - அறன் வலியுறுத்தல், குறள் : 40
Page 4 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com