srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

35. துறவு

1  யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்
பொருள்(விளக்கம்): ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை
Transliteration: Yaadhanin Yaadhanin Neengiyaan NodhalAdhanin Adhanin Ilan
Couplet: From whatever, aye, whatever, man gets free,
From what, aye, from that, no more of pain hath he
Explanation: Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 341
2  வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல
பொருள்(விளக்கம்): ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்
Transliteration: Ventin Un Taakath Thurakka ThurandhapinEentuiyar Paala Pala
Couplet: 'Renunciation' made- ev'n here true pleasures men acquire;
'Renounce' while time is yet, if to those pleasures you aspire
Explanation: After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon (the world)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 342
3  அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு
பொருள்(விளக்கம்): ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்
Transliteration: Atalventum Aindhan Pulaththai VitalventumVentiya Vellaam Orungu
Couplet: 'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire
Explanation: Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 343
4  இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
பொருள்(விளக்கம்): ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்
Transliteration: Iyalpaakum Nonpirkondru Inmai UtaimaiMayalaakum Matrum Peyarththu
Couplet: 'Privation absolute' is penance true;
'Possession' brings bewilderment anew
Explanation: To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 344
5  மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை
பொருள்(விளக்கம்): பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?
Transliteration: Matrum Thotarppaatu Evankol PirapparukkalUtraarkku Utampum Mikai
Couplet: To those who sev'rance seek from being's varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life
Explanation: What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 345
6  யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
பொருள்(விளக்கம்): யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்
Transliteration: Yaan Enadhu Ennum Serukku Aruppaan VaanorkkuUyarndha Ulakam Pukum
Couplet: Who kills conceit that utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine
Explanation: Shall enter realms above the powers divine
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 346
7  பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
பொருள்(விளக்கம்): பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன
Transliteration: Patri Vitaaa Itumpaikal PatrinaipPatri Vitaaa Thavarkku
Couplet: Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp
Explanation: Sorrows will never let go their hold of those who give not up their hold of desire
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 347
8  தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
பொருள்(விளக்கம்): அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்
Transliteration: Thalaippattaar Theerath Thurandhaar MayangiValaippattaar Matrai Yavar
Couplet: Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net
Explanation: Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 348
9  பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
பொருள்(விளக்கம்): பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்
Transliteration: Patratra Kanne Pirapparukkum MatruNilaiyaamai Kaanap Patum
Couplet: When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability
Explanation: At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 349
10  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பொருள்(விளக்கம்): எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்
Transliteration: Patruka Patratraan Patrinai AppatraipPatruka Patru Vitarku
Couplet: Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
Cling to that bond, to get thee free from every clinging thing
Explanation: Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 35 - துறவு, குறள் : 350
Page 35 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com