srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

110. குறிப்பறிதல்

1  இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
பொருள்(விளக்கம்): காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை
Transliteration: Irunokku Ivalunkan Ulladhu OrunokkuNoinokkon Rannoi Marundhu
Couplet: A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again
Explanation: There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1091
2  கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
பொருள்(விளக்கம்): கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!
Transliteration: Kankalavu Kollum Sirunokkam KaamaththilSempaakam Andru Peridhu
Couplet: The furtive glance, that gleams one instant bright,
Is more than half of love's supreme delight
Explanation: A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1092
3  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
பொருள்(விளக்கம்): கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது
Transliteration: Nokkinaal Nokki Irainjinaal AqdhavalYaappinul Attiya Neer
Couplet: She looked, and looking drooped her head:
On springing shoot of love 'its water shed
Explanation: She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1093
4  யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்
பொருள்(விளக்கம்): நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?
Transliteration: Yaannokkum Kaalai Nilannokkum NokkaakkaalThaannokki Mella Nakum
Couplet: I look on her: her eyes are on the ground the while:
I look away: she looks on me with timid smile
Explanation: When I look, she looks down; when I do not, she looks and smiles gently
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1094
5  குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
பொருள்(விளக்கம்): அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்
Transliteration: Kurikkontu Nokkaamai Allaal OrukanSirakkaniththaal Pola Nakum
Couplet: She seemed to see me not; but yet the maid
Her love, by smiling side-long glance, betrayed
Explanation: She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1095
6  உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
பொருள்(விளக்கம்): காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்
Transliteration: Uraaa Thavarpol Solinum SeraaarsolOllai Unarap Patum
Couplet: Though with their lips affection they disown,
Yet, when they hate us not, 'tis quickly known
Explanation: Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1096
7  செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு
பொருள்(விளக்கம்): பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்
Transliteration: Seraaach Chirusollum Setraarpol NokkumUraaarpondru Utraar Kurippu
Couplet: The slighting words that anger feign, while eyes their love reveal
Are signs of those that love, but would their love conceal
Explanation: Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1097
8  அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
பொருள்(விளக்கம்): நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்
Transliteration: Asaiyiyarku Untaantor Eeryaan NokkapPasaiyinal Paiya Nakum
Couplet: I gaze, the tender maid relents the while;
And, oh the matchless grace of that soft smile
Explanation: When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1098
9  ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
பொருள்(விளக்கம்): காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்
Transliteration: Edhilaar Polap Podhunokku NokkudhalKaadhalaar Kanne Ula
Couplet: The look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers' eyes
Explanation: Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1099
10  கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
பொருள்(விளக்கம்): ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன
Transliteration: Kannotu Kaninai Nokkokkin VaaichchorkalEnna Payanum Ila
Couplet: When eye to answering eye reveals the tale of love,
All words that lips can say must useless prove
Explanation: The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 110 - குறிப்பறிதல், குறள் : 1100
Page 110 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com