srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

27. தவம்

1  உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
பொருள்(விளக்கம்): எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும்
Transliteration: Utranoi Nondral Uyirkkurukan SeyyaamaiAtre Thavaththir Kuru
Couplet: To bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'
Explanation: The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 261
2  தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது
பொருள்(விளக்கம்): உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்
Transliteration: Thavamum Thavamutaiyaarkku Aakum AdhanaiAqdhilaar Merkol Vadhu
Couplet: To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence
Explanation: Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 262
3  துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்
பொருள்(விளக்கம்): துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது
Transliteration: Thurandhaarkkuth Thuppuravu Venti MarandhaarkolMatrai Yavarkal Thavam
Couplet: Have other men forgotten 'penitence' who strive
To earn for penitents the things by which they live
Explanation: It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 263
4  ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்
பொருள்(விளக்கம்): மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்
Transliteration: Onnaarth Theralum Uvandhaarai AakkalumEnnin Thavaththaan Varum
Couplet: Destruction to his foes, to friends increase of joy
The 'penitent' can cause, if this his thoughts employ
Explanation: If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 264
5  வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
பொருள்(விளக்கம்): உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்
Transliteration: Ventiya Ventiyaang Keydhalaal SeydhavamEentu Muyalap Patum
Couplet: That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done
Explanation: Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 265
6  தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
பொருள்(விளக்கம்): அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்
Transliteration: Thavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar RallaarAvanjeyvaar Aasaiyut Pattu
Couplet: Who works of 'penance' do, their end attain,
Others in passion's net enshared, toil but in vain
Explanation: Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 266
7  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
பொருள்(விளக்கம்): தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்
Transliteration: Sutachchutarum Ponpol Olivitum ThunpanjjchUtachchuta Norkir Pavarkku
Couplet: The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines
Explanation: Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 267
8  தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
பொருள்(விளக்கம்): ``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்
Transliteration: Thannuyir Thaanarap Petraanai EnaiyaMannuyi Rellaan Thozhum
Couplet: Who gains himself in utter self-control,
Him worships every other living soul
Explanation: All other creatures will worship him who has attained the control of his own soul
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 268
9  கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
பொருள்(விளக்கம்): எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்
Transliteration: Kootram Kudhiththalum Kaikootum NotralinAatral Thalaippat Tavarkkul
Couplet: E'en over death the victory he may gain,
If power by penance won his soul obtain
Explanation: Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 269
10  இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
பொருள்(விளக்கம்): ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்
Transliteration: Ilarpala Raakiya Kaaranam NorpaarSilarpalar Nolaa Thavar
Couplet: The many all things lack! The cause is plain,
The 'penitents' are few The many shun such pain
Explanation: Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 27 - தவம், குறள் : 270
Page 27 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com