
123. பொழுதுகண்டிரங்கல்
| 1 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது |
| பொருள்(விளக்கம்): நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து! |
| Transliteration: Maalaiyo Allai Manandhaar UyirunnumVelainee Vaazhi Pozhudhu |
| Couplet: Thou art not evening, but a spear that doth devour The souls of brides; farewell, thou evening hour |
| Explanation: Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1221 |
| 2 புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை |
| பொருள்(விளக்கம்): மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ? |
| Transliteration: Punkannai Vaazhi Marulmaalai EmkelpolVankanna Thonin Thunai |
| Couplet: Thine eye is sad; Hail, doubtful hour of eventide! Of cruel eye, as is my spouse, is too thy bride |
| Explanation: A long life to you, O dark evening! You are sightless Is your help-mate (also) as hard-hearted as mine |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1222 |
| 3 பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும் |
| பொருள்(விளக்கம்): பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது |
| Transliteration: Paniarumpip Paidhalkol Maalai ThuniarumpithThunpam Valara Varum |
| Couplet: With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow grows |
| Explanation: The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1223 |
| 4 காதலர் இல்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும் |
| பொருள்(விளக்கம்): காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது |
| Transliteration: Kaadhalar Ilvazhi Maalai KolaikkalaththuEdhilar Pola Varum |
| Couplet: When absent is my love, the evening hour descends, As when an alien host to field of battle wends |
| Explanation: In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1224 |
| 5 காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை |
| பொருள்(விளக்கம்): மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது |
| Transliteration: Kaalaikkuch Cheydhanandru Enkol EvankolyaanMaalaikkuch Cheydha Pakai? |
| Couplet: O morn, how have I won thy grace? thou bring'st relief O eve, why art thou foe! thou dost renew my grief |
| Explanation: O eve, why art thou foe! thou dost renew my grief |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1225 |
| 6 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன் |
| பொருள்(விளக்கம்): மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை |
| Transliteration: Maalainoi Seydhal Manandhaar AkalaadhaKaalai Arindha Thilen |
| Couplet: The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrew |
| Explanation: Previous to my husband's departure, I know not the painful nature of evening |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1226 |
| 7 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய் |
| பொருள்(விளக்கம்): காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும் |
| Transliteration: Kaalai Arumpip Pakalellaam PodhaakiMaalai Malarumin Noi |
| Couplet: My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hour |
| Explanation: This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1227 |
| 8 அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை |
| பொருள்(விளக்கம்): காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது |
| Transliteration: Azhalpolum Maalaikkuth Thoodhaaki AayanKuzhalpolum Kollum Patai |
| Couplet: The shepherd's pipe is like a murderous weapon, to my ear, For it proclaims the hour of ev'ning's fiery anguish near |
| Explanation: The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me) |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1228 |
| 9 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து |
| பொருள்(விளக்கம்): என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது |
| Transliteration: Padhimaruntu Paidhal Uzhakkum MadhimaruntuMaalai Patardharum Pozhdhu |
| Couplet: If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascend |
| Explanation: When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1229 |
| 10 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயுமென் மாயா உயிர் |
| பொருள்(விளக்கம்): பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது |
| Transliteration: Porulmaalai Yaalarai Ulli MarulmaalaiMaayumen Maayaa Uyir |
| Couplet: This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me |
| Explanation: My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 123 - பொழுதுகண்டிரங்கல், குறள் : 1230 |