
121. நினைந்தவர் புலம்பல்
| 1 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது |
| பொருள்(விளக்கம்): உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும் |
| Transliteration: Ullinum Theeraap Perumakizh SeydhalaalKallinum Kaamam Inidhu |
| Couplet: From thought of her unfailing gladness springs, Sweeter than palm-rice wine the joy love brings |
| Explanation: Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1201 |
| 2 எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில் |
| பொருள்(விளக்கம்): விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும் |
| Transliteration: Enaiththonaru Inidhekaan Kaamamdhaam VeezhvaarNinaippa Varuvadhondru El |
| Couplet: How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no grief |
| Explanation: Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1202 |
| 3 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் |
| பொருள்(விளக்கம்): வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ? |
| Transliteration: Ninaippavar Pondru Ninaiyaarkol ThummalSinaippadhu Pondru Ketum |
| Couplet: A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies stray |
| Explanation: I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1203 |
| 4 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ உளரே அவர் |
| பொருள்(விளக்கம்): என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா? |
| Transliteration: Yaamum Ulengol Avarnenjaththu EnnenjaththuOo Ulare Avar |
| Couplet: Have I a place within his heart! From mine, alas! he never doth depart |
| Explanation: He continues to abide in my soul, do I likewise abide in his ? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1204 |
| 5 தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல் |
| பொருள்(விளக்கம்): அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும் |
| Transliteration: Thamnenjaththu Emmaik Katikontaar NaanaarkolEmnenjaththu Ovaa Varal |
| Couplet: Me from his heart he jealously excludes: Hath he no shame who ceaseless on my heart intrudes |
| Explanation: He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1205 |
| 6 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன் |
| பொருள்(விளக்கம்): நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்? |
| Transliteration: Matriyaan Ennulen Manno Avaroti YaanUtranaal Ulla Ulen |
| Couplet: How live I yet? I live to ponder o'er The days of bliss with him that are no more |
| Explanation: I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1206 |
| 7 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் |
| பொருள்(விளக்கம்): மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ? |
| Transliteration: Marappin Evanaavan Markol MarappariyenUllinum Ullam Sutum |
| Couplet: If I remembered not what were I then? And yet, The fiery smart of what my spirit knows not to forget |
| Explanation: I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1207 |
| 8 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு |
| பொருள்(விளக்கம்): எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா? |
| Transliteration: Enaiththu Ninaippinum Kaayaar AnaiththandroKaadhalar Seyyum Sirappu |
| Couplet: My frequent thought no wrath excites It is not so? This honour doth my love on me bestow |
| Explanation: 146 He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1208 |
| 9 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து |
| பொருள்(விளக்கம்): ``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது |
| Transliteration: Viliyumen Innuyir Verallam EnpaarAliyinmai Aatra Ninaindhu |
| Couplet: Dear life departs, when his ungracious deeds I ponder o'er, Who said erewhile, 'We're one for evermore' |
| Explanation: My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1209 |
| 10 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி |
| பொருள்(விளக்கம்): நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக |
| Transliteration: Vitaaadhu Sendraaraik Kanninaal KaanapPataaadhi Vaazhi Madhi |
| Couplet: Set not; so may'st thou prosper, moon! that eyes may see My love who went away, but ever bides with me |
| Explanation: May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 121 - நினைந்தவர் புலம்பல், குறள் : 1210 |