
37. அவாவறுத்தல்
| 1 அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து |
| பொருள்(விளக்கம்): ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம் |
| Transliteration: Avaaenpa Ellaa Uyirkkum Enj GnaandrumThavaaap Pirappeenum Viththu |
| Couplet: The wise declare, through all the days, to every living thing That ceaseless round of birth from seed of strong desire doth spring |
| Explanation: (The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 361 |
| 2 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் |
| பொருள்(விளக்கம்): விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும் |
| Transliteration: Ventungaal Ventum Piravaamai MatradhuVentaamai Venta Varum |
| Couplet: If desire you feel, freedom from changing birth require! 'I' will come, if you desire to 'scape, set free from all desire |
| Explanation: If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 362 |
| 3 வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில் |
| பொருள்(விளக்கம்): தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம் |
| Transliteration: Ventaamai Anna Vizhuchchelvam EentillaiAantum Aqdhoppadhu Il |
| Couplet: No glorious wealth is here like freedom from desire; To bliss like this not even there can soul aspire |
| Explanation: There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 363 |
| 4 தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் |
| பொருள்(விளக்கம்): தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும் |
| Transliteration: Thoouymai Enpadhu Avaavinmai MatradhuVaaaimai Venta Varum |
| Couplet: Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow |
| Explanation: Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 364 |
| 5 அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார் அற்றாக அற்ற திலர் |
| பொருள்(விளக்கம்): ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார் |
| Transliteration: Atravar Enpaar Avaaatraar MatraiyaarAtraaka Atradhu Ilar |
| Couplet: Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty |
| Explanation: They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 365 |
| 6 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா |
| பொருள்(விளக்கம்): ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும் |
| Transliteration: Anjuva Thorum Arane OruvanaiVanjippa Thorum Avaa |
| Couplet: Desire each soul beguiles; True virtue dreads its wiles |
| Explanation: It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 366 |
| 7 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் |
| பொருள்(விளக்கம்): கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும் |
| Transliteration: Avaavinai Aatra Aruppin ThavaavinaiThaanventu Maatraan Varum |
| Couplet: Who thoroughly rids his life of passion-prompted deed, Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed |
| Explanation: If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 367 |
| 8 அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும் |
| பொருள்(விளக்கம்): ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் |
| Transliteration: Avaaillaark Killaakun Thunpam AqdhuntelThavaaadhu Menmel Varum |
| Couplet: Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tide |
| Explanation: There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 368 |
| 9 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின் |
| பொருள்(விளக்கம்): பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும் |
| Transliteration: Inpam Itaiyaraa Theentum AvaavennumThunpaththul Thunpang Ketin |
| Couplet: When dies away desire, that woe of woes Ev'n here the soul unceasing rapture knows |
| Explanation: Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 369 |
| 10 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் |
| பொருள்(விளக்கம்): இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும் |
| Transliteration: Aaraa Iyarkai Avaaneeppin AnnilaiyePeraa Iyarkai Tharum |
| Couplet: Drive from thy soul desire insatiate; Straight'way is gained the moveless blissful state |
| Explanation: The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 37 - அவாவறுத்தல், குறள் : 370 |