
56. கொடுங்கோன்மை
| 1 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து |
| பொருள்(விளக்கம்): அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் |
| Transliteration: Kolaimerkon Taarir Kotidhe AlaimerkontuAllavai Seydhozhukum Vendhu |
| Couplet: Than one who plies the murderer's trade, more cruel is the king Who all injustice works, his subjects harassing |
| Explanation: The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 551 |
| 2 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு |
| பொருள்(விளக்கம்): ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது |
| Transliteration: Velotu Nindraan Ituven RadhupolumKolotu Nindraan Iravu |
| Couplet: As 'Give' the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a gift |
| Explanation: The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says 'give up your wealth' |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 552 |
| 3 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் |
| பொருள்(விளக்கம்): ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும் |
| Transliteration: Naatorum Naati Muraiseyyaa MannavanNaatorum Naatu Ketum |
| Couplet: Who makes no daily search for wrongs, nor justly rules, that king Doth day by day his realm to ruin bring |
| Explanation: The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 553 |
| 4 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு |
| பொருள்(விளக்கம்): நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும் |
| Transliteration: Koozhung Kutiyum Orungizhakkum KolkotichChoozhaadhu Seyyum Arasu |
| Couplet: Whose rod from right deflects, who counsel doth refuse, At once his wealth and people utterly shall lose |
| Explanation: The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 554 |
| 5 அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை |
| பொருள்(விளக்கம்): கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும் |
| Transliteration: Allarpattu Aatraadhu Azhudhakan NeerandreSelvaththaith Theykkum Patai |
| Couplet: His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth away |
| Explanation: Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 555 |
| 6 மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி |
| பொருள்(விளக்கம்): நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும் |
| Transliteration: Mannarkku Mannudhal Sengonmai AqdhindrelMannaavaam Mannark Koli |
| Couplet: To rulers' rule stability is sceptre right; When this is not, quenched is the rulers' light |
| Explanation: Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 556 |
| 7 துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு |
| பொருள்(விளக்கம்): மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள் |
| Transliteration: Thuliyinmai Gnaalaththirku Etratre VendhanAliyinmai Vaazhum Uyirkku |
| Couplet: As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breathe |
| Explanation: As is the world without rain, so live a people whose king is without kindness |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 557 |
| 8 இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் |
| பொருள்(விளக்கம்): வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது |
| Transliteration: Inmaiyin Innaadhu Utaimai MuraiseyyaaMannavan Korkeezhp Patin |
| Couplet: To poverty it adds a sharper sting, To live beneath the sway of unjust king |
| Explanation: Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 558 |
| 9 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் |
| பொருள்(விளக்கம்): முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது |
| Transliteration: Muraikoti Mannavan Seyyin UraikotiOllaadhu Vaanam Peyal |
| Couplet: Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain |
| Explanation: If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 559 |
| 10 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் |
| பொருள்(விளக்கம்): ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும் |
| Transliteration: Aapayan Kundrum Arudhozhilor NoolmarapparKaavalan Kaavaan Enin |
| Couplet: Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans' sacred lore will all forgotten lie |
| Explanation: If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz, the Brahmins will forget the vedas |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 56 - கொடுங்கோன்மை, குறள் : 560 |