srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

58. கண்ணோட்டம்

1  கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
பொருள்(விளக்கம்): இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது
Transliteration: Kannottam Ennum Kazhiperung KaarikaiUnmaiyaan Untiv Vulaku
Couplet: Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides
Explanation: The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 571
2  கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை
பொருள்(விளக்கம்): அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்
Transliteration: Kannottath Thulladhu Ulakiyal AqdhilaarUnmai Nilakkup Porai
Couplet: The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear
Explanation: The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 572
3  பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்
பொருள்(விளக்கம்): இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்
Transliteration: Panennaam Paatarku Iyaipindrel KanennaamKannottam Illaadha Kan
Couplet: Where not accordant with the song, what use of sounding chords
What gain of eye that no benignant light affords
Explanation: Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 573
4  உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்
பொருள்(விளக்கம்): அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்
Transliteration: Ulapol Mukaththevan Seyyum AlavinaalKannottam Illaadha Kan
Couplet: The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright
Explanation: Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 574
5  கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்
பொருள்(விளக்கம்): கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்
Transliteration: Kannirku Anikalam Kannottam AqdhindrelPunnendru Unarap Patum
Couplet: Benignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face
Explanation: Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 575
6  மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்
பொருள்(விளக்கம்): ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்
Transliteration: Manno Tiyaindha Maraththanaiyar KannoTiyaindhukan Notaa Thavar
Couplet: Whose eyes 'neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they
Explanation: They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others)
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 576
7  கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்
பொருள்(விளக்கம்): கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்
Transliteration: Kannottam Illavar Kannilar KannutaiyaarKannottam Inmaiyum Il
Couplet: Eyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign
Explanation: Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 577
8  கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு
பொருள்(விளக்கம்): கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்
Transliteration: Karumam Sidhaiyaamal Kannota VallaarkkuUrimai Utaiththiv Vulaku
Couplet: Who can benignant smile, yet leave no work undone;
By them as very own may all the earth be won
Explanation: The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice)
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 578
9  ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை
பொருள்(விளக்கம்): அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்
Transliteration: Oruththaatrum Panpinaar Kannumkan NotipPoruththaatrum Panpe Thalai
Couplet: To smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace
Explanation: Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 579
10  பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
பொருள்(விளக்கம்): கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்
Transliteration: Peyakkantum Nanjun Tamaivar NayaththakkaNaakarikam Ventu Pavar
Couplet: They drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all-esteemed courtesy
Explanation: Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them
பால் : பொருட்பால், அதிகாரம் : 58 - கண்ணோட்டம், குறள் : 580
Page 58 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com