srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

17. அழுக்காறாமை

1  ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
பொருள்(விளக்கம்): மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்
Transliteration: Ozhukkaaraak Kolka Oruvandhan NenjaththuAzhukkaaru Ilaadha Iyalpu
Couplet: As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind
Explanation: Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 161
2  விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
பொருள்(விளக்கம்): யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை
Transliteration: Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar MaattumAzhukkaatrin Anmai Perin
Couplet: If man can learn to envy none on earth,
'Tis richest gift, -beyond compare its worth
Explanation: Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 162
3  அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
பொருள்(விளக்கம்): அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்
Transliteration: Aranaakkam Ventaadhaan Enpaan PiranaakkamPenaadhu Azhukkarup Paan
Couplet: Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not, feeling envious pain
Explanation: Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said 'he neither desires virtue not wealth.'
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 163
4  அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
பொருள்(விளக்கம்): தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
Transliteration: Azhukkaatrin Allavai Seyyaar IzhukkaatrinEdham Patupaakku Arindhu
Couplet: The wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause
Explanation: (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 164
5  அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
பொருள்(விளக்கம்): பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்
Transliteration: Azhukkaaru Utaiyaarkku Adhusaalum OnnaarVazhukka�yum Keteen Padhu
Couplet: Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate
Explanation: To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 165
6  கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
பொருள்(விளக்கம்): உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்
Transliteration: Kotuppadhu Azhukkaruppaan Sutram UtuppadhooumUnpadhooum Indrik Ketum
Couplet: Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die
Explanation: He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 166
7  அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
பொருள்(விளக்கம்): செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்
Transliteration: Avviththu Azhukkaaru Utaiyaanaich CheyyavalThavvaiyaik Kaatti Vitum
Couplet: From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey
Explanation: Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 167
8  அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
பொருள்(விளக்கம்): பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்
Transliteration: Azhukkaaru Enaoru Paavi ThiruchchetruthTheeyuzhi Uyththu Vitum
Couplet: Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain
Explanation: Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 168
9  அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
பொருள்(விளக்கம்): பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்
Transliteration: Avviya Nenjaththaan Aakkamum SevviyaanKetum Ninaikkap Patum
Couplet: To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ
Explanation: The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 169
10  அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
பொருள்(விளக்கம்): பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை
Transliteration: Azhukkatru Akandraarum Illai AqdhuillaarPerukkaththil Theerndhaarum Il
Couplet: No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain
Explanation: Never have the envious become great; never have those who are free from envy been without greatness
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 17 - அழுக்காறாமை, குறள் : 170
Page 17 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com