
23. ஈகை
| 1 வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து |
| பொருள்(விளக்கம்): இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும் |
| Transliteration: Variyaarkkondru Eevadhe Eekaimar RellaamKuriyedhirppai Neera Thutaiththu |
| Couplet: Call that a gift to needy men thou dost dispense, All else is void of good, seeking for recompense |
| Explanation: To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 221 |
| 2 நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று |
| பொருள்(விளக்கம்): பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும் |
| Transliteration: Nallaaru Eninum Kolaldheedhu MelulakamIlleninum Eedhale Nandru |
| Couplet: Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue still |
| Explanation: To beg is evil, even though it were said that it is a good path (to heaven) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 222 |
| 3 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள |
| பொருள்(விளக்கம்): தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும் |
| Transliteration: Ilanennum Evvam Uraiyaamai EedhalKulanutaiyaan Kanne Yula |
| Couplet: 'I've nought' is ne'er the high-born man's reply; He gives to those who raise themselves that cry |
| Explanation: (Even in a low state) not to adopt the mean expedient of saying 'I have nothing,' but to give, is the characteristic of the mad of noble birth |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 223 |
| 4 இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு |
| பொருள்(விளக்கம்): ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும் |
| Transliteration: Innaadhu Irakkap Patudhal IrandhavarInmukang Kaanum Alavu |
| Couplet: The suppliants' cry for aid yields scant delight, Until you see his face with grateful gladness bright |
| Explanation: To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 224 |
| 5 ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின் |
| பொருள்(விளக்கம்): பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும் |
| Transliteration: Aatruvaar Aatral Pasiaatral AppasiyaiMaatruvaar Aatralin Pin |
| Couplet: 'Mid devotees they're great who hunger's pangs sustain, Who hunger's pangs relieve a higher merit gain |
| Explanation: The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 225 |
| 6 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி |
| பொருள்(விளக்கம்): பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும் |
| Transliteration: Atraar Azhipasi Theerththal AqdhoruvanPetraan Porulvaip Puzhi |
| Couplet: Let man relieve the wasting hunger men endure; For treasure gained thus finds he treasure-house secure |
| Explanation: The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 226 |
| 7 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது |
| பொருள்(விளக்கம்): பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை |
| Transliteration: Paaththoon Mareei Yavanaip PasiyennumTheeppini Theental Aridhu |
| Couplet: Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feel |
| Explanation: The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 227 |
| 8 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் |
| பொருள்(விளக்கம்): ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? |
| Transliteration: Eeththuvakkum Inpam Ariyaarkol ThaamutaimaiVaiththizhakkum Vanka Navar |
| Couplet: Delight of glad'ning human hearts with gifts do they not know. Men of unpitying eye, who hoard their wealth and lose it so |
| Explanation: Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ? |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 228 |
| 9 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல் |
| பொருள்(விளக்கம்): பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது |
| Transliteration: Iraththalin Innaadhu Mandra NirappiyaThaame Thamiyar Unal |
| Couplet: They keep their garners full, for self alone the board they spread;- 'Tis greater pain, be sure, than begging daily bread |
| Explanation: 29 Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 229 |
| 10 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை |
| பொருள்(விளக்கம்): சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது |
| Transliteration: Saadhalin Innaadha Thillai InidhadhooumEedhal Iyaiyaak Katai |
| Couplet: 'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to give |
| Explanation: Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 23 - ஈகை, குறள் : 230 |