
103. குடிசெயல்வகை
| 1 சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு |
| பொருள்(விளக்கம்): தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும் |
| Transliteration: Soozhaamal Thaane Mutiveydhum ThamkutiyaithThaazhaadhu Ugnatru Pavarkku |
| Couplet: Who labours for his race with unremitting pain, Without a thought spontaneously, his end will gain |
| Explanation: Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1021 |
| 2 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு |
| பொருள்(விளக்கம்): குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள் |
| Transliteration: Kutram Ilanaaik Kutiseydhu VaazhvaanaichChutramaach Chutrum Ulaku |
| Couplet: With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claim |
| Explanation: People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1022 |
| 3 நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் |
| பொருள்(விளக்கம்): நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார் |
| Transliteration: Nallaanmai Enpadhu Oruvarkuth ThaanpirandhaIllaanmai Aakkik Kolal |
| Couplet: Of virtuous manliness the world accords the praise To him who gives his powers, the house from which he sprang to raise |
| Explanation: A man's true manliness consists in making himself the head and benefactor of his family |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1023 |
| 4 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை |
| பொருள்(விளக்கம்): போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு |
| Transliteration: Amarakaththu Vankannar Polath ThamarakaththumAatruvaar Metre Porai |
| Couplet: The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strong |
| Explanation: Amid his kindred so the burthen rests upon the strong |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1024 |
| 5 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும் |
| பொருள்(விளக்கம்): தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும் |
| Transliteration: Kutiseyvaark Killai Paruvam MatiseydhuMaanang Karudhak Ketum |
| Couplet: Wait for no season, when you would your house uprear; 'Twill perish, if you wait supine, or hold your honour dear |
| Explanation: As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1025 |
| 6 இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு |
| பொருள்(விளக்கம்): தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான் |
| Transliteration: Itumpaikke Kolkalam Kollo KutumpaththaikKutra Maraippaan Utampu |
| Couplet: Is not his body vase that various sorrows fill, Who would his household screen from every ill |
| Explanation: Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1026 |
| 7 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி |
| பொருள்(விளக்கம்): வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும் |
| Transliteration: Itukkankaal Kondrita Veezhum AtuththoondrumNallaal Ilaadha Kuti |
| Couplet: When trouble the foundation saps the house must fall, If no strong hand be nigh to prop the tottering wall |
| Explanation: If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1027 |
| 8 கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் |
| பொருள்(விளக்கம்): உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது |
| Transliteration: Karumam Seyaoruvan Kaidhooven EnnumPerumaiyin Peetutaiyadhu Il |
| Couplet: Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall stand |
| Explanation: There is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1028 |
| 9 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையான் நீளும் குடி |
| பொருள்(விளக்கம்): ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும் |
| Transliteration: Aalvinaiyum Aandra Arivum EnairantinNeelvinaiyaal Neelum Kuti |
| Couplet: The manly act and knowledge full, when these combine In deed prolonged, then lengthens out the race's line |
| Explanation: One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1029 |
| 10 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் |
| பொருள்(விளக்கம்): தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும் |
| Transliteration: Kutiseyval Ennum Oruvarkuth TheyvamMatidhatruth Thaanmun Thurum |
| Couplet: 'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the way |
| Explanation: The Deity will clothe itself and appear before him who resolves on raising his family |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 103 - குடிசெயல்வகை, குறள் : 1030 |