
7. புதல்வரைப்பெறுதல்
| 1 பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற |
| பொருள்(விளக்கம்): அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை |
| Transliteration: Perumavatrul Yaamarivadhu Illai ArivarindhaMakkatperu Alla Pira |
| Couplet: Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain |
| Explanation: Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 61 |
| 2 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் |
| பொருள்(விளக்கம்): பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது |
| Transliteration: Ezhupirappum Theeyavai Theentaa PazhipirangaapPanputai Makkat Perin |
| Couplet: Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birth |
| Explanation: The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 62 |
| 3 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும் |
| பொருள்(விளக்கம்): தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை |
| Transliteration: Thamporul Enpadham Makkal AvarporulThamdham Vinaiyaan Varum |
| Couplet: 'Man's children are his fortune,' say the wise; From each one's deeds his varied fortunes rise |
| Explanation: Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 63 |
| 4 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் |
| பொருள்(விளக்கம்): சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது |
| Transliteration: Amizhdhinum Aatra Inidhedham MakkalSirukai Alaaviya Koozh |
| Couplet: Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd |
| Explanation: The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 64 |
| 5 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு |
| பொருள்(விளக்கம்): தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் |
| Transliteration: Makkalmey Theental Utarkinpam Matru AvarSorkettal Inpam Sevikku |
| Couplet: To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear |
| Explanation: The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 65 |
| 6 குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் |
| பொருள்(விளக்கம்): தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள் |
| Transliteration: Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham MakkalMazhalaichchol Kelaa Thavar |
| Couplet: 'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred, Who music of their infants' lisping lips have never heard |
| Explanation: 'The pipe is sweet, the lute is sweet,' say those who have not heard the prattle of their own children |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 66 |
| 7 தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் |
| பொருள்(விளக்கம்): தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும் |
| Transliteration: Thandhai Makarkaatrum Nandri AvaiyaththuMundhi Iruppach Cheyal |
| Couplet: Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat |
| Explanation: The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 67 |
| 8 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது |
| பொருள்(விளக்கம்): பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும் |
| Transliteration: Thammindham Makkal Arivutaimai MaanilaththuMannuyirk Kellaam Inidhu |
| Couplet: Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breast |
| Explanation: That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 68 |
| 9 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் |
| பொருள்(விளக்கம்): நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள் |
| Transliteration: Eendra Pozhudhin Peridhuvakkum ThanmakanaichChaandron Enakketta Thaai |
| Couplet: When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she bore |
| Explanation: The mother who hears her son called 'a wise man' will rejoice more than she did at his birth |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 69 |
| 10 மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல் |
| பொருள்(விளக்கம்): ``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும் |
| Transliteration: Makandhandhaikku Aatrum Udhavi IvandhandhaiEnnotraan Kol Enum Sol |
| Couplet: To sire, what best requital can by grateful child be done? To make men say, 'What merit gained the father such a son?' |
| Explanation: (So to act) that it may be said 'by what great penance did his father beget him,' is the benefit which a son should render to his father |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 7 - புதல்வரைப்பெறுதல், குறள் : 70 |