
8. அன்புடைமை
| 1 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் |
| பொருள்(விளக்கம்): உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும் |
| Transliteration: Anpirkum Unto Ataikkundhaazh AarvalarPunkaneer Poosal Tharum |
| Couplet: And is there bar that can even love restrain? The tiny tear shall make the lover's secret plain |
| Explanation: Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 71 |
| 2 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு |
| பொருள்(விளக்கம்): அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர் |
| Transliteration: Anpilaar Ellaam Thamakkuriyar AnputaiyaarEnpum Uriyar Pirarkku |
| Couplet: The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone |
| Explanation: Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 72 |
| 3 அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு |
| பொருள்(விளக்கம்): உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும் |
| Transliteration: Anpotu Iyaindha Vazhakkenpa AaruyirkkuEnpotu Iyaindha Thotarpu |
| Couplet: Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love alone |
| Explanation: They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 73 |
| 4 அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு |
| பொருள்(விளக்கம்): அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும் |
| Transliteration: Anpu Eenum Aarvam Utaimai AdhueenumNanpu Ennum Naataach Chirappu |
| Couplet: From love fond yearning springs for union sweet of minds; And that the bond of rare excelling friendship binds |
| Explanation: Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 74 |
| 5 அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு |
| பொருள்(விளக்கம்): உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம் |
| Transliteration: Anputru Amarndha Vazhakkenpa VaiyakaththuInputraar Eydhum Sirappu |
| Couplet: Sweetness on earth and rarest bliss above, These are the fruits of tranquil life of love |
| Explanation: These are the fruits of tranquil life of love |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 75 |
| 6 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை |
| பொருள்(விளக்கம்): வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் |
| Transliteration: Araththirke Anpusaar Penpa AriyaarMaraththirkum Aqdhe Thunai |
| Couplet: The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain |
| Explanation: The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 76 |
| 7 என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் |
| பொருள்(விளக்கம்): அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும் |
| Transliteration: Enpi Ladhanai Veyilpolak KaayumeAnpi Ladhanai Aram |
| Couplet: As sun's fierce ray dries up the boneless things, So loveless beings virtue's power to nothing brings |
| Explanation: Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie worms |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 77 |
| 8 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று |
| பொருள்(விளக்கம்): மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது |
| Transliteration: Anpakath Thillaa Uyirvaazhkkai VanpaarkanVatral Marandhalirth Thatru |
| Couplet: The loveless soul, the very joys of life may know, When flowers, in barren soil, on sapless trees, shall blow |
| Explanation: The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 78 |
| 9 புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு |
| பொருள்(விளக்கம்): அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்? |
| Transliteration: Puraththurup Pellaam Evanseyyum YaakkaiAkaththuruppu Anpi Lavarkku |
| Couplet: Though every outward part complete, the body's fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimed |
| Explanation: Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 79 |
| 10 அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு |
| பொருள்(விளக்கம்): அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் |
| Transliteration: Anpin Vazhiyadhu Uyirnilai AqdhilaarkkuEnpudhol Porththa Utampu |
| Couplet: Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within |
| Explanation: That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 8 - அன்புடைமை, குறள் : 80 |