srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

33. கொல்லாமை

1  அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
பொருள்(விளக்கம்): எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்
Transliteration: Aravinai Yaadhenin Kollaamai KoralPiravinai Ellaan Tharum
Couplet: What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill
Explanation: Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 321
2  பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
பொருள்(விளக்கம்): இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை
Transliteration: Pakuththuntu Palluyir Ompudhal NoolorThokuththavatrul Ellaan Thalai
Couplet: Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives
Explanation: The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 322
3  ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
பொருள்(விளக்கம்): அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன
Transliteration: Ondraaka Nalladhu Kollaamai MatradhanPinsaarap Poiyaamai Nandru
Couplet: Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say
Explanation: Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 323
4  நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி
பொருள்(விளக்கம்): எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்
Transliteration: Nallaaru Enappatuvadhu Yaadhenin YaadhondrumKollaamai Soozhum Neri
Couplet: You ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay
Explanation: Good path is that which considers how it may avoid killing any creature
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 324
5  நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
பொருள்(விளக்கம்): உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்
Transliteration: Nilaianji Neeththaarul Ellaam KolaianjikKollaamai Soozhvaan Thalai
Couplet: Of those who 'being' dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay
Explanation: Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 325
6  கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று
பொருள்(விளக்கம்): கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்
Transliteration: Kollaamai Merkon Tozhukuvaan VaazhnaalmelSellaadhu Uyirunnung Kootru
Couplet: Ev'n death that life devours, their happy days shall spare,
Who law, 'Thou shall not kill', uphold with reverent care
Explanation: Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 326
7  தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
பொருள்(விளக்கம்): தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது
Transliteration: Thannuyir Neeppinum Seyyarka ThaanpiridhuInnuyir Neekkum Vinai
Couplet: Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away
Explanation: Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 327
8  நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை
பொருள்(விளக்கம்): பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்
Transliteration: Nandraakum Aakkam Peridheninum SaandrorkkukKondraakum Aakkang Katai
Couplet: Though great the gain of good should seem, the wise
Will any gain by staughter won despise
Explanation: The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 328
9  கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
பொருள்(விளக்கம்): பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்
Transliteration: Kolaivinaiya Raakiya Maakkal PulaivinaiyarPunmai Therivaa Rakaththu
Couplet: Whose trade is 'killing', always vile they show,
To minds of them who what is vileness know
Explanation: To minds of them who what is vileness know
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 329
10  உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
பொருள்(விளக்கம்): வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்
Transliteration: Uyir Utampin Neekkiyaar Enpa Seyir UtampinSellaaththee Vaazhkkai Yavar
Couplet: Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained
Explanation: (The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 33 - கொல்லாமை, குறள் : 330
Page 33 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com