srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

78. படைச்செருக்கு

1  என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
பொருள்(விளக்கம்): போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்
Transliteration: Ennaimun Nillanmin Thevvir PalarennaiMunnindru Kalnin Ravar
Couplet: Ye foes stand not before my lord for many a one
Who did my lord withstand, now stands in stone
Explanation: O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 771
2  கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
பொருள்(விளக்கம்): வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது
Transliteration: Kaana Muyaleydha Ampinil YaanaiPizhaiththavel Endhal Inidhu
Couplet: Who aims at elephant, though dart should fail, has greater praise
Than he who woodland hare with winged arrow slays
Explanation: It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 772
3  பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
பொருள்(விளக்கம்): பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்
Transliteration: Peraanmai Enpa Tharukanon RutrakkaalOoraanmai Matradhan Eqku
Couplet: Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes
Explanation: The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 773
4  கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
பொருள்(விளக்கம்): கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்
Transliteration: Kaivel Kalitrotu Pokki VarupavanMeyvel Pariyaa Nakum
Couplet: At elephant he hurls the dart in hand; for weapon pressed,
He laughs and plucks the javelin from his wounded breast
Explanation: The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly)
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 774
5  விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
பொருள்(விளக்கம்): களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்
Transliteration: Vizhiththakan Velkona Teriya AzhiththimaippinOttandro Vanka Navarkku
Couplet: To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear
Explanation: Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 775
6  விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து
பொருள்(விளக்கம்): ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்
Transliteration: Vizhuppun Pataadhanaal Ellaam VazhukkinulVaikkumdhan Naalai Etuththu
Couplet: The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain
Explanation: The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 776
7  சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
பொருள்(விளக்கம்): சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்
Transliteration: Suzhalum Isaiventi Ventaa UyiraarKazhalyaappuk Kaarikai Neerththu
Couplet: Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife
Explanation: The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves)
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 777
8  உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்
பொருள்(விளக்கம்): தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்
Transliteration: Urinuyir Anjaa Maravar IraivanSerinum Seerkundral Ilar
Couplet: Fearless they rush where'er 'the tide of battle rolls';
The king's reproof damps not the ardour of their eager souls
Explanation: The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 778
9  இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்
பொருள்(விளக்கம்): சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது
Transliteration: Izhaiththadhu Ikavaamaich Chaavaarai YaarePizhaiththadhu Orukkir Pavar
Couplet: Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they've sworn
Explanation: Who would reproach with failure those who seal their oath with their death ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 779
10  புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து
பொருள்(விளக்கம்): தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு
Transliteration: Purandhaarkan Neermalkach Chaakirpin SaakkaatuIrandhukol Thakkadhu Utaiththu
Couplet: If monarch's eyes o'erflow with tears for hero slain,
Who would not beg such boon of glorious death to gain
Explanation: If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging
பால் : பொருட்பால், அதிகாரம் : 78 - படைச்செருக்கு, குறள் : 780
Page 78 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com