
104. உழவு
| 1 சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை |
| பொருள்(விளக்கம்): பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது |
| Transliteration: Suzhandrumerp Pinnadhu Ulakam AdhanaalUzhandhum Uzhave Thalai |
| Couplet: Howe'er they roam, the world must follow still the plougher's team; Though toilsome, culture of the ground as noblest toil esteem |
| Explanation: Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1031 |
| 2 உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து |
| பொருள்(விளக்கம்): பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும் |
| Transliteration: Uzhuvaar Ulakaththaarkku Aaniaq ThaatraadhuEzhuvaarai Ellaam Poruththu |
| Couplet: The ploughers are the linch-pin of the world; they bear Them up who other works perform, too weak its toils to share |
| Explanation: Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1032 |
| 3 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் |
| பொருள்(விளக்கம்): உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது |
| Transliteration: Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar RellaamThozhudhuntu Pinsel Pavar |
| Couplet: Who ploughing eat their food, they truly live: The rest to others bend subservient, eating what they give |
| Explanation: They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1033 |
| 4 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் |
| பொருள்(விளக்கம்): பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் |
| Transliteration: Palakutai Neezhalum Thangutaikkeezhk KaanparAlakutai Neezha Lavar |
| Couplet: O'er many a land they 'll see their monarch reign, Whose fields are shaded by the waving grain |
| Explanation: Patriotic farmers desire to bring all other states under the control of their own king |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1034 |
| 5 இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் |
| பொருள்(விளக்கம்): தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார் |
| Transliteration: Iravaar Irappaarkkondru Eevar KaravaadhuKaiseydhoon Maalai Yavar |
| Couplet: They nothing ask from others, but to askers give, Who raise with their own hands the food on which they live |
| Explanation: Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1035 |
| 6 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கும் நிலை |
| பொருள்(விளக்கம்): எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும் |
| Transliteration: Uzhavinaar Kaimmatangin Illai VizhaivadhooumVittemen Paarkkum Nilai |
| Couplet: For those who 've left what all men love no place is found, When they with folded hands remain who till the ground |
| Explanation: If the farmer's hands are slackened, even the ascetic state will fail |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1036 |
| 7 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் |
| பொருள்(விளக்கம்): ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும் |
| Transliteration: Thotippuzhudhi Kaqsaa Unakkin PitiththeruvumVentaadhu Saalap Patum |
| Couplet: Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secure |
| Explanation: If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1037 |
| 8 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு |
| பொருள்(விளக்கம்): உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது |
| Transliteration: Erinum Nandraal Eruvitudhal KattapinNeerinum Nandradhan Kaappu |
| Couplet: To cast manure is better than to plough; Weed well; to guard is more than watering now |
| Explanation: Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1038 |
| 9 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும் |
| பொருள்(விளக்கம்): உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும் |
| Transliteration: Sellaan Kizhavan Iruppin NilampulandhuIllaalin Ooti Vitum |
| Couplet: When master from the field aloof hath stood; Then land will sulk, like wife in angry mood |
| Explanation: If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1039 |
| 10 இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் |
| பொருள்(விளக்கம்): வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள் |
| Transliteration: Ilamendru Asaii Iruppaaraik KaaninNilamennum Nallaal Nakum |
| Couplet: The earth, that kindly dame, will laugh to see, Men seated idle pleading poverty |
| Explanation: The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 104 - உழவு, குறள் : 1040 |